பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

தான். தங்களுடைய மிருகத்தனமான சுயநலத்திலுைம், மனிதத்தன்மை இல்லாத வர்க்க எண்ணங்களிலுைம் குருடாகிப் போனவர்கள் தான், மனமும் அறிவுத்திறமும் அடைந்த இவ் வெற்றிகளைக் காணத் தவறிவிடுகிருர்கள். கண்ணிருங்தும் காண மனம் இல்லாதிருப்பவர்களும், உண்மையைக் காணக் கூடாது என்று தங்கள் எஜமானர் களால் தடுக்கப் பெற்றுள்ள பத்திரிகைக்காரர்களும் தான் இவற்றைப் பார்க்கத் தவறி விடுகிருர்கள்.

சோவியத் யூனியனில் ஒரே ஒரு எஜமான் தான் உண்டு. இது தான் அதனுடைய மூலாதாரமான சாதனை யாகும். முதலாளித்துவ நாடுகளிலிருந்து அதை வேருக எடுத்துக் காட்டுவதும் இதுவே யாகும். லெனினின் மாணவர்களது இயக்கத்தினல் வழிகாட்டப் படுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரது அரசாங்கம் தான் இந்த எஜமானன். அது தனக்காக அமைத்துக் கொண்டுள்ள கோக்கம் மிகவும் தெளிவானது;- பல இனங்களேச் சேர்ந்த பதினறுகோடி மக்களில் ஒவ்வொரு தனி நபருக்கும் அவரவர் திறமைகளையும் விசேஷ ஆற்றலை யும் தாராளமாக வளர்ப்பதற்கு ஏற்ற கிலேமைகளைச் சிருஷ்டிப்பது. வேறு விதமாகச் சொல்வதானால், சாத்திய மான, ஆயினும் செயலற்று இருக்கிற, மூளே, நரம்பு நாளங் களின் சக்தியனேத்தையும் செயல் முறையாக மாற்றுவதும், அதன் ஆக்கல் பண்புகளேக் கிளர்ச்சியுறச் செய்வதுமே ஆகும். இது அனுபவ சாத்தியம் தானு?

கடைமுறையில் இது சாதிக்கப்படுகிறது! கலாசாரத் தின் சகல பாதைகளும் அவர்களுக்கு முன்னுல் திறந்து விடப்பட்டிருப்பதால், கலே, விஞ்ஞானம், தொழில் துணுக்க இயல், ராஜ்ய கிர்வாகம் முதலிய எல்லாத் துறை களிலும் சக்தியைப் பிரயோகித்துப் பணி புரியும் பல்லாயிரக் கணக்கான திறமையுள்ள இளைஞர்களே மக்கள் சிருஷ்டித்துத் தருகிறர்கள்.