பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

அரசாங்கத்துக்கு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்', அந்தச் சங்தர்ப்பத்தில் அரசாங்கம் ஸ்டோலி பின் என்ற மந்திரியின் கைப்பிடியில் சிக்கியிருங்தது. அவன் சர்வாதிகாரமாக, ஐயாயிரத்துக்கும் அதிகமான தொழி லாளிகளையும் விவசாயிகளையும் தூக்கிலிட்டான்.

கம் காலத்தில், சரித்திர ரீதியில் விஞ்ஞான பூர்வ மாகவும் அமைந்துள்ள - உண்மையாகவே உலக மனித நலத்தை நோக்கமாக உடைய - மார்க்ஸ், லெனின் ஸ்டாலின் ஸ்தாபித்த பாட்டாளி வர்க்க மனிதத்துவத்தின் பயங்கரமான எதிர்ப்பு அரசாங்கங்களுக்கு ஏற்பட் டுள்ளது. சகல நாடுகளிலும் உள்ள எல்லா இனங்களேயும் சேர்ந்த தொழிலாளி மக்களே முதலாளி வர்க்கத்தின் இரும்புப்பிடியிலிருந்து விடுவித்து அவர்களுக்குப் பரிபூரண மான சுதந்திரம் அளிப்பது தான் பாட்டாளி வர்க்க மனிதத்துவத்தின் கோக்கமாகும். முதலாளி வர்க்கத்தின் இரும்புப் பிடியைத் தொழிலாளிகள் தாம் உருவாக்கு கிருர்கள், முதலாளி வர்க்கத்தினரின் அழகான வாழ்க்கை'யை அமைத்துக் கொடுப்பவர்கள் பாட்டாளி மக்கள் தான்; ஆனால் அதே சமயத்தில் அவர்கள் அடிமை களாய், தரித்திரராய் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிரு.ர்கள். இவ்விஷயத்தை, மனித அன்பை அடிப்படையாகக் கொண்ட இந்த உண்மையான கோட்பாடு எவரும் மறுத் துரைக்க முடியாத வகையில் கிருபித்து விட்டது.

முதலாளி வர்க்கத்தை எதிர்த்து இரக்கமற்ற போராட்டம் கிகழ்த்துவதற்குச் சரித்திர பூர்வமாக நியாய மான உரிமையையும், முதலாளித்துவ உலகத்தின் சண்டாளத்தனமான சகல அஸ்திவாரங்களேயும் தகர்த்து கொறுக்கி அழித்து விடும் உரிமையையும், புரட்சிகரமான இந்த மனிதத்துவம் பாட்டாளி மக்களுக்கு அளிக்கிறது. மனித ஜாதியின் வரலாற்றிலேயே முதல் முறையாக,