பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரும் அ தியமானும் శ్ర இருக்கின்றன ; தான் பெற்ற செல்வத்தைப் பல்லோர்க்கும் பகுத்துண்ணும் வண்மையுடைய எம் அதியமான் ஆயுதங்கள், பன்முறை போரில் பகைவுரைக் குத்துதலான் கங்கும் நுனியும் முரிந்து, செப்பனிடக் கொல்லனது பணிக்களரியாகிய சிறிய கொட்டிலே அடைந்திருக்கின்றன," என்ற கருத்தையமைத்து, ஒரு பாட்டினேப் பாடி, அவனது படைக்கலத்தைப் புகழ்பவர் போல இகழ்ந்தும், அதியமான் படைக்கலத்தைப் பழிப்பவர் போலப் புகழ்ந்தும், குறிப்பால் தொண்டைமான் வீரத்தினும் தம் அதியமான் வீரமே சிறந்ததெனக் காட்டினர். அவ்வளவில் தொண்டையர் கோன் ஒளவையாரை கோக்கி, அம்மையிர், அப்படியாயின், தும் காட்டுள் என்ளுேடு போர் செய்யும் வலிமையுடையாருமுளரோ ?” என வினவினன். அதற்கு அவர், வேந்தே, நீ போர் செய்யக் கருதுவையாயின், எம் முடைய காட்டின்கண் அடிக்குங் கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் பாம்பு போன்ற இளைய வலிய வீரருளர் ; அவரே பு மன்றி, மன்றின் கண் தூங்கும் மத்தளவாத்தியத்தின் காற்றடித் தலால் எழுந்த ஓசையைக் கேட்டாலே அது போர்ப்பறை என்று கருதி மகிழும் போர் விருப்புடைய எம்முடைய தலை வனும் உளன்," என்று அதியமானது போர் விருப்பத்தையும் அஞ்சாமையையும் எடுத்துக் கூறித் தொண்டைமானது இருக்கை அடக்கிவிட்டுத் தகடூர் வந்து சேர்ந்தார். • இவர் காஞ்சிக்குத் தூதுபோய் மீண்ட சின்குட்களுக்குப் பின்னர், திருக்கோவலூர் அரசனகிய மலையமான் திரு முடிக் காரி என்பான், பல வேற்றரசர்களேப் போரில் வென்று. அடக்கி, வெற்றி மிகுந்து, தனக்கு சிகராவார் ஒருவருமில ரென்று பெருமிதங் கொண்டிருந்தான். இதனை அறிந்த அதியமான், அவனது ஆற்றலை அடக்கித் தன் புகழை மேம் படுத்தக் கருதி, அவளுேடு பகைமை கொண்டு, கால்வகைப் பெரும்படையோடும் போய், மலையமானது கோவலூர் மதில் வளேத்தனன் ; கோவலூர் அரசனகிய காரியும் காரிக் குதிரை ஊர்ந்து படையுடன் வக்தெதிர்த்துக் கடும்போர் புரிந்தனன். அதியமான் தனது வேலாலும், வாளாலும், ஆளாலும், கரியா லும், பரியாலும் காரியின் படையை முசியடித்துப் பெருஞ் சமர் கிகழ்த்தின்ை. அவ்வமயம் அதியமானுடன் போர்க்களஞ்