பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம் மை மேம்படுத்தும் எண்ணங்கன் li

இவ்வாறு அவர் கண்டு பிடித்த மற்ற எல்லாவற்றை பும் விட, அவர் மிகப் பெரும் களிப்பு பெற்றது எதிலே என்றால், தொழில் வளர்ச்சி, சரித்திர வளர்ச்சி முதலிய சம்பவங்களில் புரட்சிகரம்ான மாற்றங்களை உருவாக்கக் கூடிய சில உண்மைகளைக் கண்டு பிடித்தபோதுதான்.

எடுத்துக்காட்டாக, மின்சார் சக்தியைப் பற்றி அவர் ஆய்வு செய்த போதும், மார்சல் டெப்ரஸ் (Marce Deperz) கண்டுபிடிப்புப் பற்றி உழைத்த போதும், இடைவிடாமல் அதற்காக அக்கறை காட்டி ஆய்வு செய்த போதும் பெரு மகிழ்வடைந்தார்:

மார்க்ஸ் ஒரு புரட்சிவாதி

மார்க்ஸ் விஞ்ஞானி மட்டுமன்று; அவர் ஒரு புரட்சி வாதி முதலாளித்துவத்தின் கீழ் உருவாகியுள்ள சமுதாய அமைப்பு. அதன்மீது எழுப்பப்பட்டுள்ள அரக் சம்பந்தப் ஊட்ட நிர்வாக நிறுவனங்கள் ஆகியனவற்றை ஆணி வேரோடு வீழ்த்திட வேண்டும் என்ற சிந்தனையிலே அவர் கோடை சூரியனாக மாறி முதலாளித்துவ அமைப்பு முறை கனைச் சுட்டெரித்த சிந்தனையாளரானார்:

இத்தகைய ஒரு கடுமையான வீழ்ச்சியை அதற்கு விளைவிக்க; தொழிலான இயக்கங்கள் எந்த வகையிலா வது. யாருடனாவது ஒத்துழைக்க வேண்டும் என்ற கருதி துப்போராட்டத்திலே அவர் கடுமையான கதிரவனாக நின்றார்:

தொழிலாளர்களுக்கு விடுதலையும் வேண்டும்; அதற் காகவும்கூட, தொழிலாளர் இயக்கங்கள் யாருடனாவதி, எந்த வகையிலாவது ஒத்துழைப்புப் பெற வேண்டும் என்ற சிந்தனையிலே அவர் சித்திரை மாத அக்னிக்கோன அருணனானார்,