பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கார்ல் மார்க்சின்

எனவே, கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டை சித்த னையாளர்கள் தோன்றிய சிந்தனையாளர் நூற்றாண்டு என்று பெருமையோடு பெயரிட்டு அழைக்கலாம்.

அந்த நூற்றாண்டில் தோன்றிய மிகப் பெரிய சிந்தனை யாளர்களுள் ஒருவன் கார்ல் மார்க்ஸ் இவன் ஜெர்மன் நாட்டு எல்லை, ஃபிரானஸ் நாட்டு எல்லைகள் சந்திக்கும் ரைன் லாந்து என்ற இடத்திலே உள்ள டிரியர் என்ற கிராமத்திலே பிறந்தார்.

மார்க்ஸ் இனத்தால் யூதர்; அதுவும் புரோகிதர் பரம் அரையைச் சேர்ந்தவர் மதத்தால் அவர் கிறித்துவர்! தந் தையின் பெயர் ஹாஷெல் மார்க்ஸ் அவர் வழக்குரை ாகப் பணியாற்றிவந்தார்; தாயார் டச்சு தர்ட்டைச் சேர்ந்த பெண்; பெயர் ஹென்ரிட்டே!

ஹிர்ஷெல் மார்க்ஸ் 1824-ம் ஆண்டு தனது மனைவியுட னும்-எட்டு குழந்தைகளுடனும் கத்தோலிக்கக் கிறித்துவ மதப்பிரிவில் அவர்கள் சேர்ந்தார். குடும்பம் நடத்தப் போதிய வருவாய் இல்லாததால் ஹிர்ஷெல் மார்க்ஸ் ஹைரின் மார்க்ஸ் என்ற பெயரோடு மதம் மாறினார்: மதம் மாறியதற்குப் பிறகு அவரது குடும்பம் நல்ல வருவாயு டன் வளமாக வாழ'ஆரம்பித்தது. யூத, கிறித்துவ இனக்கலப்பே மார்க்ஸ்!

இந்த யூத, கிறித்துவக் கல்ப்பு மதத் தம்பதிகளுக்கு 1818-ம் ஆண்டு, மே மாதம், 5-ம் நாள் இரவு ஒன்றர்ை மணிக்கு பிறந்தார் கார்ல் மார்க்ஸ்என்ற மனிதகுல ஞானி: மார்க்சுக்கு ஐந்து சகோத்ரிகள், இரண்டு சகோதரர்கள் இவருடன் பிறந்தார்கள். -

இந்த எண்வரிலே நான்கு பேர் சிறுவயதிலேயே, அவர்களது குடும்ப நோயான காச நோய்க்குப் பலியா