பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 இrல் மாரிக்இன்

மார்க்சும் குடித்தார்: அதனால் ஒருநாள் சிறைவாசம் கட அனுபவித்தார்; இந்தச் செலவுகள் அதிகமானதால் அவருக்கு வழக்கமாகத் தந்தை அனுப்பிய பணம் போத வில்லை. அதனால், கண்டவர்களிடமும் கடன் வாங்கிக் செலவு செய்யும் பழக்கம் அவருக்கு ஏற்பட்டது-கடனாளி affrestrari?!

இந்தச் சீர்கேடுகளைக் கேள்விப் பட்ட மார்க்ஸ் தந்தை, தனது மகனை வேறிடத்திற்கு, மேற்படிப்புக்கு அனுப்பப் போவதாக பல்கலைக்கழக மேலாளர்களுக்கு கடிதம் எழுதி, மார்க்சைப் பல்கலைக்கழகத்திலே இருந்து விலக்கிக் கொண்டார்.

3. ஹெகல் தத்துவமும் காதல் வாழ்க்கையும்:

பர்ன் பல்கலைக் கழகக் கல்வியை விட்டு விலகிய மார்க்ஸ், தனது சொந்த ஊரான டிரியரில் தங்கி இருந்த போது, தனது பக்கத்து வீட்டுப் பெண்ணான ஜென்னி என்பவளுடன் காதல் ஏற்பட்டது. அவள் செல்வச் செழிப் புள்ள பணக்காரர் வீட்டுப் பென்!

ஜென்னியின் தகப்பனார் பெயர், லட்விக்வான் வெஸ்ட் பாலன். இவர் ஜெர்மன் நாட்டு அரசியலில் பணி புரியும் ஒரு பணியாளர். இவருக்கு நிரந்தரமான வருமா னமும், முன்னோர்கள் சேர்த்து வைத்துள்ள செல்வமும், அதற்குரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது. இவருடைய பெண் ஜென்னி, மார்க்சைவிட நான்கு வய்து பெரியவள். மார்க்ஸ்-ஜென்னி காதல் பாசம்:

மார்கஸ் குடும்பமும்-ஜென்னி குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளிலே வாழ்ந்து வந்ததால், இரண்டு குடும் பங்களும்-இணைபிரியா, பழக்க வழக்கங்களோடு பழகி