பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்ம்ை மேம்படுத்தும் எண்ணங்கள் 25

வந்தார்கள். அதனால் ஜென்னியுடன் மார்க்சுக்குத் தொடர்பும், காதல் அரும்பும் வாய்ப்யும் ஏற்பட்டு விட்டது. -

ஜென்னியின் தந்தை கிரேக்க இலக்கியப் பித்தர்; சேக்ஷ்பியர் எழுதிய நூல்களின் அபிமானி! மார்க்சோ இளமையிலே கவிபாடும் கவிதைப் பிரியன். அதனால் இருவருக்கும் அதிகமான பற்றும் பாசமும் உருவாயிற்று.

இலக்கிய சர்சைகளிலும், கத்துவ விவாதங்களிலும் ஜென்னியின் தந்தையும் மார்க்சும் ஈடுபட்டு வாதப் பிரதி வாதங்கள் சூடாக எழுகின்ற நேரங்களிலே எல்லாம், ஜென்னி களிர்நிலவாக இடையிலே நுழைந்து அந்த இரு வரின் வெப்பத்தைத் தணிப்பாள்.

ஜென்னி அழகே உருவாண் அமைதியான பெண், கல்வி அறிவு நிரம்பப் பெற்றவள்: பண்புள்ள பாவை, பார்ப்பதற்கு கவர்ச்சியானத் தோற்றம், வாதம் புரிபவர் களை அடக்கும் வல்லமை பெற்ற அறிவும் உடையவள். அதனால், இவர்களது வாக்குவாதங்களைத் தணித்து அடக்கும் போது, மார்க்ஸ், அவள் மகுடிமுன் அடங்கும் நாகம் போலாகி விடுவார். இந்த வகையிலும் மார்க்கம். ஜென்னியும் ஒருவ்ரை ஒருவர் நேசித்துப்புரிந்து கொண்ட அன்பரானார்கள்.

இந்த அன்பு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வந்ததை மார்க்சின் தந்தை புரிந்து கொண்டார். இருந்தாலும், ஜென்னிக்கும் மார்க்சுக்கும் உள்ள எல்லா சுபாவங்களும், குடும்பத் தகுதிகளும் மலைக்கும் ம்டுவும் போல் உள்ளதை எண்ணி, இவர்களுக்குத் திருமணம் நடந்தால் வளமாக, எவ்விதக் குறைவுமின்றி வாழ்க்கையை நடத்துவார்களா என்று மனப் ாேராட்டம் மார்ச்சின் தந்தைக்கு ஏற்பங்கூது: