பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 strffệv udrrf?ềstastr

இழப்பங்களே ஏற்பட்டன. வாதமேடிைகள் மக்கள் இடையே பொறிபறக்க வெளிவந்தன.

  • மனிதர்கள் அனைவரும் சம உரிமை உடைய சகோதரர்கள். நாடு, இனம், ஜாதி சம்பந்தமாக உருவா, கின்ற வேற்றுமைகள், கல்வி அறிவு இல்லாமையால் ஏற். படுகின்றன என்ற எழுச்சி மிக்க எண்ணங்கள் இளைஞர் களிடையே வீறு பெற்று எழுந்திருந்தன.

இளைஞர்களது இந்த புதிய சிந்தனைகளுக்கும் ஹெகல் தத்துவ ஆராய்ச்சியில் போதிய ஆதரவு இருந்தது. 'அரச சக்தி, மக்கட் சக்தியிலே இருந்து தோன்றுவ தனால், அது மக்கட் சக்திக்கு விரோதமாக இருக்க முடியாது" என்று முழக்கமிட்ட இளைஞர் சக்திக்கு எதிராக, முதியவர்கள் திரண்ட சக்தி பெரும் எதிர்ப்பையே எழுப்பியது.

"எந்த அரசு, எப்போது ஆட்சி புரிகின்றதோ அந்த சக்தி மக்களுக்குத் தேவைப்படுவதனால்தான் இயங்கு கிறது. எனவே அந்த மக்கள் சக்தி தேவையானது.மட்டு மல்ல-நியாயமானது என்று, மேற்கூறிய இளைஞர் சக்தியை எதிரித்து முதியவர்கள் அணிசக்தி கூறியது.

இந்த இருபெரும் சக்திகளுக்கு இடையே உள்ள பேதங்கன் என்ன வென்றால், முதியவர்கள் அணி சக்தி, "தற்போது உள்ள அரச சக்தியை மாற்றக் கூடாது;அதுவே இயங்க வேண்டும்" என்றார்கள்.

இளைஞர் அணி சக்தி, அந்த அரச சக்தி கூடாது: வந்த சக்தியிலே சில மாற்றங்கள் செய்தாக வேண்டும், என்று மூர்க்கத் தனமாக முழக்கம் செய்தது.

முதியவர்கள் சக்திக்கு_முதிய ஹெகாலியர் என்றும்" இளைஞர்க்ள் சக்திக்கு, "இளைய் ஹெகாலியர் என்றும், இரு அணிகளாகப் பிரித்து நாட்டில் குழப்ப வாதம் செய்து கொண்டிருத்தார்கள்.