பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 懿

வந்து சேர்ந்தான். இந்த ஒரு காரணத்தை வைத்து மார்க்ஸ் ஜெர்மனியால் நாடு கட்த்தப் பட்டவர்களுடன் நெருக்கமாகப் பழகினான்,

மார்க்ஸ் எங்கல்ஸ் சந்திப்பு: அலோசனை!

மார்க்ஸ் நண்பர் எங்கல்கம் ஆப்போது அங்கே வந்தார். இருவரும் சேர்ந்து எதிர்காலத் திட்டம் என்ன என்பது பற்றிச் சிந்தித்தார்கள். அப்போதைய அரசியல், பொருளா தார நிலைகளை ஆழமாக ஆய்ந்து ஒரு நூல் எழுதலாம் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.

நூல் நிலயங்களின் புத்தகப் புழுவாக மீண்டும் மார்க்ஸ் நெளிந்து நகர்ந்து கொண்டிருந்தார். படித்த புத்தகங்களி லிருந்து குறிப்புச் சேர்க்கும் நிலைமை, அதற்காக மார்க்ஸ் அலையும், அலைச்சல், இயராது அல்லும் பகலும் அவர் கடிக்கும் அருமைகளை எங்கல்ஸ் அப்போது தான் உணர்ந் தான்! இருவரும் நூலை வெளியிடப் போட்டத் திட்டம் தோல்வி கண்டது. ஆனால், மார்க்சும் எங்கல்கம் அதற்காக உழைத்த உழைப்பு உருக்குலையாத உருவ்ம் எடுத்தது.

வறுமையின் தத்துவம்' என்ற ஒருநூலை 'ப்ரூதோன்" PROuDHON என்ற பிரெஞ்சு அபேத வாதி எழுதினான்" இந்த புத்தகம் முழுக்க முழுக்க பொருளாதாரப் பிரச்னை களை அடிப்படையாகக் கொண்ட ஓர் அபேதவாதம் ஆகும். இந்த ஆராய்ச்சி நூலை எதிர்த்து மார்க்ஸ், அந்த அபேத வாதி புத்தகப் பெயரைத் தலைப்பையே மாற்றி தி "தத்துவத்தின் வறுமை" என்ற பெயரால் மற்றோர் ஆய்வு நூலை அதற்கு மறுப்பாக வெளியிட்டார்.

மார்க்சும், எங்கெல்சும் ப்ரஸ் செல்ஸ் நகரத்தில் நூலாய்வு செய்து கொண்டிருந்த போது தான். பொது ஆண்-மைச் சங்கம் என்ற ஒரு சங்கம் ஆங்கே உருவாவிந்து