பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

畿 கசல் மார்க்சின்

சகிதங்கம் ஒரு தத்துவம்ச?

சமதர்மம் என்ற வார்த்தையை ஒரு தத்துவமாக உருவகப்படுத்திக் காட்டியவர் கார்ல் மாரிக்ஸ். அவ்வாறு அன்று செய்து காட்டிாமல் இருந்தால், இன்று யார் ஆவரை உலகளாவிய அளவில் தினைத்துப் கார்த்திருப்பாரிகள்?

இத்த சமதர்மம் என்ற சொல், தத்துவம்-இதற்கு முன்பும் இல்லாமல் இல்லை! சமதர்மம் என்ற இந்த நாகரிகப் பண்பு-கற்பனை உலகத்திலே, புராண உலகத் திலே, எங்கோ, எப்பொழுதோ ஒரு காலத்தில், மக்களு டிைய வாழ்க்கையில் மார்கழி மாதப் பணிப்படலம் போல அடர்ந்து படர்ந்திருந்த துண்டு!...

ஆந்த படர்வு நிலையை, ஒழுங்காக, சிந்தனைக்குக் கொண்டு வந்து ஆராய்ச்சிக்கு அடிப்படை. ஆதாரமாக்கி, ஆதிலே இருந்து பல அற்புத உண்மைகளைக் கண்டு பிடித்து உலகுக்கு உணர்த்தி நிலைநாட்டிய மாபெரும் இத்தனையாளன் மார்க்ஸ்!

அந்த சமதர்மம், சமுதாயத்திலே உலாவரும்போதுசாதி பேத ஏற்றத் தாழ்வுகணை அகற்றி, யாவரும் கேளிர், என்ற, சங்ககாலச் சமுதாயத்தை நினைத்துப் பார்க்கவும். நிலை குலைந்துபோன இன்றைய சமுதாயத்தை மீண்டும் உருவாக்கி நிலை நிறுத்தவும் பயன்படும் ஒரு தத்துவமாகத் ஆனந்தத் தாண்டவமிடுகிறது.

அதே சமதர்மம் என்ற சொல் அரசியலுக்குள் துழையும் போது-வர்க்கபேத மற்ற சமுதாயம் உருவாக வழிகாட்டுகின்றது. ஏகாதிபத்தியத்தை, ஏகபோகத்தை. முதலாளித்துவத்தை, சுயேச்சாதிகாரக் கொடுங்கேர்ண்மை யைத் தவிடு பொடியாக்கி, எல்லாரும் எல்லாமும் பெற்று, சுயமரியாதையோடு, தன்மானத்தோடும். கவரிமா இன காக மனித தலம் மேம்பாடு பெறவேண்டும். என்ற மேன் மையை மலர்த்து கின்றது: