பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7

நேரம் மட்டும் நாள், இந்த மனித குல மேம்பாட்டுக்குரிய உழைப்பாளியை, அமைதியாக, சிரிச்சைக்காகத் தனியாக விட்டு வைத்திருந்தோம்!

திரும்பி வந்து இந்த ஞானியை நாங்கள் பார்த்த போது, சமநர்மச் சிற்பியான மார்க்ஸ்; தனது நாற்காலியில் மௌன நிலையில் மௌனமாக நீடு துயில் கொண்டு விட்டார்.

இனிமேல் எங்களிடம் ஏது கலந்துரையாட முடியாத நிலையில்; தனது இறுதி நிலை மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்!

உலகத் தொழிலாளர்களின் வளமான வாழ்வுக்குப் போராடிக் கொண்டிருந்த ஓர் உயிர்;

முதலாளித்துவத்தை எதிர்த்து, கம்யூனிசத்தைப் பரப்புவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட ஓர் ஆன்மா:

இன்று ஓய்ந்து விட்டது!

மார்க்ஸ் மறைந்தது இந்த உலகுக்கு எவ்வளவு பெரிய நட்டம் என்று இப்போது அளந்து கூறமுடியாது.

மகத்தான அந்த அறிவுச் சக்தியின் அருமையை. பெருமயை எதிர்காலத் தொழிலாளர்கள் உலகம் தனது அனுபவ வெற்றிகளால்தான் அதை அளந்து அறிவிக்க முடியும்!

அரசியல், அறிவியல், சமுதாயவியல், கலையியல், மதவியல், சமயவியல், வானியல், ஆன்மிவியல் என்ற ஒவ்வொன்றிலும், மக்கட் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும், அவ்வக்கால நிலைகளுக்கு ஏற்றவாறு அவரவர் சிந்தனைகளைச் செலுத்துவார்கள்.

ஆனால், வாழ்வதற்காகப் பிறவி எடுக்காத அவர்கள்: ஏதோ பிறந்ததற்காக வாழ்ந்தாக வேண்டுமே என்ற