பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 75

அவர்களுடை பொருள் உற்பத்தி முறைகளும் மாறிவிடும் இந்த பொருள் உற்பத்தி முறையின் மாற்றத்திற்கு ஏற்றார் போலவே அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளும் மாறும். இதனால் அவர்களது சமுதாய சமபந்தங்களும் மாறுபடும்.

ஒரு சமுதாயத்தில் என்னென்ன விதமான வகுப்பு வித்தியாசங்கள், தகுதிகள், வேற்றுமைகள் முதலியன இருக்கின்றன. இந்த பல்வகை வகுப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எவ்விதமான தொடர்புடையவர்களாக இருக் கிறார்கள் என்பதைக் கணக்கிடும் போது, சமுதாயத்தில் உள்ளவர்கள் பொருட்களை எந்த அளவுக்குச் சொந்த மாக்கிக் கொண்டார்கள் என்ற உண்மைகள் நன்கு புலப்படும்.

மிஞ்சிய மதிப்பு என்பது எது?

"மிஞ்சிய மதிப்பு" என்றால் என்ன? என்ற இந்த தத்துவத்திற்குப் பெட்ரண்டு ரஸ்ஸல் என்ற தத்துவ ஞானி என்ன விளக்கம் கொடுக்கிறார் பாருங்கள்.

ஒரு தொழிலாளி ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் உழைப்புக்கு என்ன மதிப்போ, அதாவது எவ்வளவு கூலியோ, அதனை ஆறுமணி நேரத்திலேயே உற்பத்தி செய்து விடுகிறான். அதாவது, பன்னிரண்டு மணி நேரம் அவன் உழைத்தால், என்ன கூலி அவ்னுக்குக் கிடைக்கின் றதோ, அந்த தொகைக்கு ஈடான பொருளை அவன் ஆறு மணிநேர உழைப்பிலேயே உற்பத்தி செய்து விடுகிறான்.

மிகுதி ஆறுமணி நேரத்தில் அவன் உழைத்து உற்பத்தி செய்கிற பொருள் இருக்கிறதே, அதுதான் முதலாளியின் சுரண்டல் பொருள்: அவனுடைய மிஞ்சிய மதிப்பு. கடைசி ஆதுமணி நேரம், அந்த தொழிலாளி உழைத்துப் பொது