பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கன் #3

suamstås Machisuallism என்ற சூழ்ச்சி திறம் வாய்த்த சாணக்கியத்தை எதிர்த்துப் போர் புரிந்து வரும் தத்துவங் களுக்கு இன்றுள்ள வரலாற்றுப் பெயர்தான் Periyalism என்ற பெரியாரின் கோட்பாடாகும்.

மதம் ஒரு அபினி என்று மார்க்ஸ் கூறினார் அந்த போதை மக்களிடையே பரவிடக் கூடாது என்று நினைத்த பெரியார், காந்தியடிகள் கோட்சேவால் சுடப்பட்டு மறைந்த போது, இந்து மத போதையேற்று வாழும் ஒரு மதத்திற்கு காந்தி, மதம் என்றும், அந்த மதம் வாழும் இந்திய நாட்டிற்கு காந்தி நாடென்றும், பெயரிடுங்கள் என்று அப்போதைய ஆட்சியிடம் வேண்டினார்! ஏத்த காந்திபக்தனும் அதை ஏற்க மறுத்துவிட்டதை இந்த உலகமே அறியும்.

சாதி ஒழிய வேண்டுமா? கலப்புமணம் செய்: சுயமரியா

தத் திருமணம் செய் என்று கூறியவர் தந்தை பெரியார் தச் செய்யும் பழக்கத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி ன்ார் ஆத்மா,மோட்சம், நரகம்,மறுபிறப்பு.பிதிர்லோகம் கடவுள் போன்றவற்றைக் கற்பித்தவன். அயோக்கியன். நம்புகிறவன் மடையன். இவற்றால் பலன் அனுபவிக் கிறவன் மகா மகா அபோக்கியன் என்று மதம் எதிர்ப்பிலே ஈடுபட்டு பகிரங்கமாக சவால் விட்டு சமுதாய ஆறப்போர் புரிந்தவர் தந்தை பெரியார்!

இவை போன்ற எண்ணற்ற சமுதாயச் சீர்திருத்தங்

கதைச் செய்தவர் தந்தை பெரியார் என்று நாம் ஒரு பெரும் பட்டியலே போட்டுக் காட்டலாம் இடம் கருதி இத்துடன் நிறுத்துகிறோம். அடுத்து அறிஞர் பெருக்கின் அண்ணா அவர்கள், தந்தை பெரியாரின் சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தின் தலைமாணவராகஇருந்தவர்:

அவர் சிறந்த நாவன்மை படைத்த அற்புதப் கேச் சாளர்! தமிழிலே மட்டுமல்ல- ஆங்கிலத்திலும்கூடி!