பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 காற்றிலே மிதந்தவை

என்று அவர் பாடியுள்ள அழகிய இசைப்பாடல் காவிரித் தாய்க்குச் சிலப்பதிகாரச் செய்யுள் அளித்த சிறந்த வாழ்த்து. .

சிலப்பதிகாரத் தலைவனும் த லேவியுமாகிய கோவலனும் கண்ணகியும் ஊ ழ் வினே உறுத்த மதுரை மாநகர் நோக்கிச் சென்றனர்; வழியிலே வையை யாற்றைக் கண்டனர். அங்கிகழ்ச்சியை வரையப்புகுந்த இளங்கோ அடிகள், வையை யாற்றை அழகிய ஒரு பெண்ணுக வருணித்துள்ள திறம் கலைச்சுவை நுகர்வார்க்குப் பெருவிருந்தாய் அமைந்துள்ளது. வையையின் இரு கரைகளிலு முள்ள புறவாய் எங்கணும் செறிந்து மலர்ந்திருந்த எண்ணற்ற மலர்களே, வையையாம் மங்கை இடையி லணியும் பூந்துகில். அவ்வாறே இரு கரைகளின் அகவாய் எங்கும் மலர்ந்த மலர்களே, அவள் பூணும் மேகலை. சுருங்கச் சொன்னல், ஆற்றின் கரை களே அவள் அல்குல். ஆற்றிடைக்குறையின்கண் எதிரெதிராய் கின்ற மணற்குன்றங்களே, அம் மங்கை நல்லாளின் மார்பகங்கள். கரைகளிலே உதிர்ந்து கிடக்கும் முருக்கமலர்களே, அவள் செவ் வாய். அருவி நீரோடு ஆற்றிலே கலக்கவந்த முல்லே மலர்களே, அவள் பூக்கும் புன்முறுவல். குறுக்கும் நெடுக்கும் ஒடித் திரியும் கருங்கயல் மீன்களே, அவள் நெடிய கண்கள். மலர் நீங்காக் கருமணலே, அவள் மனமலி கூந்தல். இத்தகைய வைகை நல் லாள்-கவிவாணர் புகழ்கொண்ட காரிகை-உலகு புரங்காட்டும் உயர் பேரொழுக்கத்தையுடைய பொய் யாக் குலமகள் - கோவலனையும் கண்ணகியையும்