பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நதியும் கரையும் §3

கண்ட மாத்திரத்தில் நெஞ்சம் புழுங்கிள்ை. இப் பெருங்குடி மக்களின் வாழ்வு மதுரை மாநகரில் சிதையப் போகின்றதே! என்ன துயரம் உழப் பளோ இம்மங்கல மாமடந்தை' என்று எண் ணிய போது அவள் இதயம் புழுவாய்க் துடிக்கது; கண்ணிர் பெருகியது. ஆல்ை, தன் ஆற்ருெணுக் துயரத்தைக் கோவலனும் கண்ணகியும் அறியுமாறு காட்ட அவள் நெஞ்சம் துணியவில்லை. எனவே,

தையற் குறுவது தானறிந் தனன்போல் புண்ணிய நறுமல் ராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனன் அடக்கிப் புனல்யா றன்றிது பூம்புனல் யாறென அனநடை மாதரும் ஐயனுந் தொழுது'

(புறஞ்சேரியிறுத்த காதை, 17:1-175) போற்ற நடந்து சென்ருளாம் வையை. மதுரைக் காண்டத்தில் இளங்கோ அடிகள் தம் காவியப் பாத்திரங்களின் வாழ்க்கையோடு இயற்கையின் பெருஞ்சக்தியாகிய ஆற்றைத் தம் கற்பனையால் பிணேத்துக் காட்டும் இக்காட்சி, கல் நெஞ்சையும் கரைந்துருகச் செய்யும் தன்மையதாகும்.

சிலப்பதிகாரப் புகார்க் காண்டத்தில் வரும் காவிரி யி ன் அழகையும் மதுரைக் காண்டத்தில் வரும் வையையின் போக்கையும் கண்டோம். இனி வஞ்சிக் காண்டத்தில் வரும் பே ரியா ற் றின் பெருமையைக் காண்போம்:

கோங்கும் வேங்கையும் கொன் ைற யும் சுர புன்னேயும் சந்தனமும்மஞ்சாடியும் ஆகிய மரங்கள்