பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 காற்றிலே மிதந்தவை

சொட்டச் சொட்டப் பாஞ்சோதி முனிவர் பாடிய அப்பெருநூல், ஆலவாய்க்கடவுள் அடியவர்க்காக எளிவந்து புரிந்த அறுபத்துநான்கு திருவிளையாடல் களையும் விரித்துரைக்கும் பெற்றி வாய்ந்தது. அங் நூலுள் அறுபத்தொன்ருவது படலமாய் அமைக் துள்ள மண் சுமந்த படலத்தில், வையை ஆற்று வெள்ளம் கரைகளை உடைத்துக்கொண்டு பெருகி வரும் காட்சியையும், அதல்ை நகருக்குக் கேடு சூழாத வகையில் அரசனும் மக்களும் ஆற்றும் பணியையும், பரஞ்சோதி முனிவர் மிக அழகாகப் பாடியுள்ளார். நாட்டின் நல்லமைச்சர்கள் நகர மக்களுள் இன்னின்னர் இவ்வளவு இவ்வளவு கரை அடைக்க வேண்டும் என்று முடிவு செய்து பறை அறைந்த உடனே, செல்வன் முதல் வறியன் வரை அனைவரும் ஒன்று திரண்டு ஆக்க வேலையிலிறங்கிய காட்சியைப் பின்வரும் பாடல்களில் திருவிளையாடற் புராணம் சித்திரித்துக் காட்டுகிறது :

மண்டொ டுங்கருவி கூடை யாளரும ரஞ்சு மந்துவரு வார்களும் விண்டொ டும்படி நிமிர்ந்து வண்டுபடு விரிய சுந்தழைய லாலமுங் கொண்ட திர்த்துவரு வாரும் வேறுபல

கோடி கூடிய குழாமுநீர் மொண்ட ருந்தவரு மேக சாலமென

வருபு னற்கரையின் மொய்த்தனர். கிட்டு வார்பரி நிறுத்து வாரரவு ருட்டு வாரடிகி டத்துவார் இட்டு வார்தழைநி ரப்பு வார்விளியெ

ழுப்பு வார்பறையி ரட்டுவார்