பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நதியும் கரையும் 97

வெட்டு வார்பன லெடுத்து வார்சென்வெ ருட்டு வார்கடிது துடுமெனக் கொட்டு வார்கரை பரப்பு வாருவகை

கூரு வார்குரவை குழறுவார். கட்டு வார்கரை புடைப்ப நீர்கடுகல்

கண்டு நெஞ்சது கலங்குவார் மட்டி லிசதமுனி வென்னே யன்னேயினி யாறு கென்றெதிர் வணங்குவார் கொட்டு வார்மன லுடைப்பு டங்கமகிழ் கொள்ளு வாக்குரவை துள்ளுவார் எட்டு மாதிரமு மெட்ட வசயொலியெ

ழுப்பு வார்பறையி ரட்டுவார்.’

(ஆலவாய்க்காண்டம் : 4, 5, .ே)

நதியும் கரையும் கற்றமிழ்க் கவிஞர்க்குக் காலக் தொறும் காட்டி வந்த காட்சியைத் தமிழிலக்கியம் மிக விரிவாக எடுத்துக் காட்டுகின்றது. மிக விரிந்த தோர் ஆராய்ச்சிக்குரிய அப்பொருளைப்பற்றிய சிற் சில குறிப்புகளையே இதுவரை பார்த்த நாம், இறுதி யாக நாம் வாழும் சுதந்தா யுகத்திற்கு வித்திட்ட வீரக் கவிஞராகிய பாரதியாரின் பாட்டில் நதியும் கரையும் எவ்வாறு காட்சி அளிக்கின்றன என் பதைக் காண்பது ஒரு சிறந்த இன்பமன்ருே ?

பாட்டுக்கொரு புலவர் பாரதியார்; நாட்டின் விடுதலையை-உரிமை வாழ்வைத்-தம் மூச்சாகக் கொண்டு கவிதை புனேந்த பெருமகனர். அவர் பாடல்களிலே உரிமை முழக்கம் முழங்குவதைப் போன்றே ஒற்றுமை முரசொலியும் வீறு கொண்டு. முழங்குவதைக் காணலாம். இந்தியப் பெருநாட்டில்

7 -