பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காற்றிலே மிதந்தவை

இனவாரி அரசுகளமைய வேண்டும் என்பதே அவர் அரசியல் இலட்சியம். ஆனால், அந்த இலட்சியத்தின் வாழ்வு இனவாரி அரசுகள் அனைத்தும் இதயம் ஒன்றுபட்டு, நாம் அனைவரும் இந்தியக் குடியரசின் பல்வேறு அங்கங்களே, என்று பரி பூ ர ன மாக உணர்ந்து செயலாற்றுவதிலேதான் அ டங் கி க் கிடக் கிற து என்பதையும் தெள்ளத்தெளிவாக உணர்ந்திருந்தார் தீர்க்க தரிசனம் வாய்ந்த அந்தத் தெய்வக் கவிஞர். உரிமையும் ஒற்றுமையும் ஒன் றித் திகழும் சுதந்தர சமதர்ம இந்தியாவே அவர் கண்ட பெருங்கனவு. அக்கனவுக் காட்சிகளுள் ജ്ഞു,

சிந்து நதியின்மிசை நிலவினில்ே

சேர நன் னுட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்

தோணிக ளோட்டிவிள யாடிவருவோம்!' என்ற அழகிய பாடல் நம் அகக் கண்களுக்குக் காட்டுகிறது.

இந்திய ஒற்றுமை குறித்துக் கவிஞர் பாரதியார் கண்ட இக்கவிதைக் கனவிற்கு-கலைக் கனவிற்கு -ஒரு நிகரும் உண்டோ?

தமிழ் இலக்கியமே ஒரு பேரியாறு. அவ்வாற் றின் கரையில் அமர்ந்துகொண்டு நதியையும் கரை' யையும் பற்றி நம் முன்னேர் பாடிச்சென்ற பாடல் களையும், அவற்றில் அவர் கூறிச் சென்ற கருத்துக் களையும் வாழ்நாளெல்லாம் ஆராயலாம்; அஇப விக்கலாம்; அளவிலா இன்பம் எய்தலாம்!