பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அரச கவிஞர்-குலசேகராழ்வார்

புவியாண்ட மன்னர் பலரைக் கவியாண்ட மன்னராகவும் கண்ட பெருமை தமிழிலக்கிய வர லாற்றின் தனிச் சிறப்பாகும். தமிழன்னே அரி யணேயிலமர்ந்து செங்கோலோச்சிச்செம்மாந்திருந்த சங்க காலத்தில் முப்பத்தொருவருக்கு மேற்பட்ட தமிழாசர் கவியரசராயும் விளங்கிய வாய்மையினைத் தமிழ் வரலாறு எடுத்து இயம்புகிறது. இங்கினம் நாடாளும் மன்னரும் ஏடாளும் வே க் த ர ய் க் திகழ்ந்த பெருமை சான்ற பரம்பரையில் சேரர் குடியும் தமிழ்க் குலமும் வாழ்வு பெறத் தோன்றிய பெருமானே குலசேகராழ்வார். சங்க காலத்திற் குப் பின்பு தமிழிலக்கிய வரலாற்றில் தவழ்ந்து விளையாடிய சமய காலத்தின் பெருமையாய்ப் புக ழாய்த் திகழும் பேறு பெற்றவர்களுள் ஒருவரே அரச கவிஞர் குலசேகரர்.

சேர நாட்டில் கோழிக்கூடு என்னும் மாகிலப் பகுதியைப் பண்டு திடவிரதர் என்பார் ஆண்டு வந்தார். எல்லாச் செல்வமும் சோப்பெற்றிருந்த அச்செந்தமிழ்நாட்டு வேந்தருக்கு மக்கட்பேருகிய செல்வம் மட்டும் இல்லாத குறை பெருங்குறையாய் இருந்தது. அக்குறை நீங்கத் திடவிரதர் வா மிருந்து பெற்ற செல்வமே குலசேகரர். சில குறிப் புக்களால் திருவஞ்சைக்களமென்ற ஊரிலே குல சேகரர் அவதரித்தார் என்பது தெரியவருகிறது.