பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲0ፅ காற்றிலே மிதந்தவை

மன்னவர் குமரராய் மாநிலத்தில் தோன்றிய குல சேகரர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண முமாய் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி பெற்று வந்தார்,நல்லாசிரியர் துணேகொண்டு நான்கு வேதங் களையும் ஆறு சாஸ்திரங்களையும் திே நூல்களையும் போர்க் கலேகளையும் ஐயந்திரிபறக் கற்று வல்லவ ராயினுர் ; நாளடைவில் திடவிரத மகாராசரால் அரசுரிமை முழுவதையும் ஏற்குமாறு முடி கவிக்கப் பெற்ருர்; தம் செங்கோல் சிறப்பால் ராமராஜ்யம் சேர நாட்டில் நடைபெறச் செய்தார். இங்கிலேயில் குலசேகரர் இல்லற வாழ்வும் செழித்தோங்கிக் சிறப்புற்றிருந்தது. வீட்டிலும் நாட்டிலும் கல்லறம் ஒம்பிக்கொண்டிருந்த குலசேகரர் உள்ளத்தில் ஒரு சமயம் மாமலர் நாற்றம் போல மறைந்திருந்த ஞான விசாரம் வெளிப்பட்டு மணம் கமழ்வதாயிற்று. ஞானவிசாரத்தின் பயனுகக் குலசேகரர் கருணைக் கடலான திருமாலே தம்மை உய்விக்க வல்ல பரம் பொருள் என்பதைத் தெளியலானர்; அது முதல் திருமாவின் அருட்பண்புகளாகிய பெருங்கடலில் மூழ்கி மூழ்கி இன்புறலானர்; திருமாலின் பல்வேறு அவதாரங்களைப்பற்றிய வரலாறுகளையும் மீண்டும் மீண்டும் கேட்பதில் சலியாத ஆர்வம் கொள்ள லானுர் ; பாற்கடலில் துயின்ற பரமனுறையும் பதிகள் அனைத்தையும் சென்று வணங்கப் பெருங் காதல் கொண்டார். சிறப்பாகக் குலசேகரர் திரு மாவின் அடியார்களே இறைவன் அமிசமென்றே போற்றி வழிபாடாற்றுவதிலும் அவர்கள் திரு வாயால் இராமபிரான் வாழ்க்கைச் சரிதத்தைக்