பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரச கவிஞர்-குலசேகராழ்வார் 165

களவாடியவர்கள்’ என்று பகர்ந்தனர். அது கேட்டு அரசர் உள்ளம் துடித்தது. திருமால் அடியார்கள் ஒரு போதும் இத்தகைய கடுந்தொழிலேக் கனவிலும் கினேயார். இதை உங்கட்கு உறுதிப்படுத்த யானே பிரமாணம் காட்டுவேன்! என்று சொல்லிப்பாம்பை உள்ளிட்டதொரு குடத்தைச் சபை முன்னே கரு வித்துத் திருமாலடியார் மனம், மெய், மொழி மூன்ரு லும் தாயராயின், இப்பாம்பு என்னேத் தீண்டாது அடங்குக!' என்று சபதம் செய்து, அக்குடத்தி' னுள்ளே கையிட்டனர். அப்பொழுது சக்தியத்திற் குக் கட்டுப்பட்ட சர்ப்பம் சிறிதும் கொடுமை புரியாது ஒடுங்கிக் கிட்ந்தது. அது கண்ட அமைச்சர் அஞ்சி நடுங்கித் தாம் செய்த தவற்றை மறையாது கூறி அரசர்பால் ம ன் னி ப் பும் வேண்டினர். அருள் நெஞ்சினரான குலசேகரரோ, இனி விேர் பாக வதர்க்கு எப்போதும் பணிவிடை செய்வதே நுமது குற்றம் தீரும் வகை, என்று பணித்தருளினர். இவ் வாறு ராமசரித்திரத்திலும் திருமாலடியார்களிடமும் ஆராக்காதல் கொண்டிருந்த குலசேகரரைப் பத்தர் உலகம் ஆழ்வார் என்றும் பெருமாள்' என்றும் போற்றியதில் வியப்பில்லே அன்ருே?

குலசேகரர் நாள் செல்லச்செல்ல அரசாளும் பெருவாழ்வில் வெறுப்புக் கொண்டார். அணி அரங்கன் திருக்கோயில் முற்றத்தில் தொண்டரடிப் பொடியாய் வாழ்வதே வாழ்வு என்று கருதலானர்; எனவே, தம் திருமகனே அரியணேயில் அமரச்செய்து விட்டு, மன்னுகாவிரிசூழ் திருவரங்கத்திற்குப் பயண ம்ானர். அங்கு எழுந்தருளியுள்ள கம்பெருமாளைக்