பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - காற்றிலே மிதந்தவை

சேவித்து அவ்வழகிய மணவாளனேயே தனக்குரிய காதலனுகக் கருதிய தம் திருமகளே அப்பெருமா லுக்கே உரிய பொருளாகக் கொடுத்து மணம் செய் வித்து, இறைபணிகளே விதிமுறை வழுவாது ஆற்றி யிருக்கலானர். மற்றும் தி ரு வே ங் க டம், திரு அயோத்தி, தில்லைத் திருச்சித்திரகூடம், திருக் கண்ணபுரம், திருமாலிருஞ்சோலே, திருவிற்றுவக் கோடு முதலிய திருப்பதிகட்கும் சென்று ஆங்காங்கு எழுந்தருளியுள்ள பெருமாளேக் கண்மணி குளிரக் கண்டு வணங்கி, அப்பால் நம்மாழ்வார் பிறந்தருளிய திருக்குருகூரை அடுத்துள்ள பிரமதேசத்திற்கும் சென்று திரு த் தொண்டு செய்துகொண்டிருந்த கிலேயில், தமது அறுபத்து ஏழாம் ஆண்டில் பரமபத மடைந்தார் குலசேகரப்பெருமாள் என்பர் கற்றறிந் தோர். -

குலசேகராழ்வார் வட மொழியிலும் தமிழ் மொழியிலும் கவிபாடும் ஆற்றலில் சிறந்து விளங்கி ர்ை என்பர். வடமொழியில் முகுந்த மாலே என்ற கொரு நாலே அவர் இயற்றியதாகக் கூறுவர். இது பற்றிக் கருத்து வேறுபாடும் நிலவுகிறது. ஆயினும், அாசகவிஞராகிய குலசேகரரின் கவித்திறனுக்கும் பத்தி உண ர் ச் சி க்கும் கடவுள் அடியார்பால் கொண்டிருந்த மதிப்பிற்கும் சான்று பகர்வனவாய் விளங்குவது அவர் இயற்றிய பெருமாள் திருமொழி என்னும் நூலாகும். குலசேகராழ்வார் செப்பிய இச்செஞ்சொல்மொழி நூற்றைந்தையும் கூறுவார் உள்ளம் பத்தி வெள்ளத்தில் மூழ்குவது திண்ணம். பெருமாள் திருமொழியைப் பத்துப் பிரிவுகளாகப்