பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##8 காற்றிலே மிதந்தவை

திருமொழி. ராமாயணக் கதைச் சுருக்கத்தை இரத் தினச் சுருக்கமாய்க் கூறுவது அங்கண் நெடுமதில்’ என்று தொடங்கும் பத்தாம் திருமொழி. இவ்வாறு 105 பாசுரங்களாய்ப் பத் துத் திருமொழிகளாய் இராமாயண சாரமாய் விளங்கும் பெருமாள் திரு மொழியைப் போற்றிப் புகல்வார் கண்ணுர் நரக மென்பது திண்னமன்ருே ?

பத்திக்கனியின் தீஞ்சாருய் விளங்கும் தமிழ் மாலையாகிய பெருமாள் திருமொழியில் உள்ள சிற் சில மலர்களின் அழகையும் மணத்தையும் அவை பிலிற்றும் பத்தித் தேனின் தெய்வச் சுவையை மட்டும் ஈண்டு துகர்வோம் :

மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை

வண்ணனே என் கண்ணனவன் குன்ற மேந்தி ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை

அமரர்கள்தத் தலைவனையந் தமிழி னின் பப் பாவினை அவ் வடமொழியைப் பற்றற் ருர்கள்

பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் கோவினதா வுறவழுத்தி என்றன் கைகள்

கொய்ம்மலர்து யென்றுகொலோ கூப்பும் நாளே! இது .ெ ப. ரு ம | ள் திருமொழியில் நான்காவ தாய் அமைந்த பாடல். இப்பாடலில் குலசேகராழ் வார் தம் கண்கண்ட தெய்வமாகிய கண்ணனே மணி வண்ணனைத் தமிழ்க் கவிதையாய் - வடமொழிச் சுவையாய்ப் போற்றும் திறத்தினை எண்ணி வியந்து மகிழ்ந்து போற்ருதிருத்தல் இயலுமோ?

ஆனுத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானுளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்!