பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲፱፱ காற்றிலே மிதந்தவை

'மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மா!என் பால்நோக்கா யாகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன்' தான்நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேத்தன் கோல்நோக்கி வாழும் குடிபோன் றிருந்தேனே!

(பெருமாள் திருமொழி, 5 : )ே இப்பாடலால் அரசகவிஞராகிய குலசேகரர் கரவறி யாக் குடிமக்களின் அன்புள்ளத்தின் ஆழத்தை அறிந்திருந்த அறிவு புலகுைம்.

மன்னுடிகழ்க் செனசதைன் மணிவயிறு வாய்த்தவனே! தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர் கன்னிதன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே! என்னுடைய வின்னமுதே! இராகவனே! தாலேலோ.

(பெருமாள் திருமொழி, 8 : 1) அருமை சான்ற இக்கவிதையால் ஆழ்வாரின் கவி யுள்ளம்-குழந்தைகளைப் போற்றும் தெய்விகத் திரு வுள்ளம்-தெள்ளிதிற்புலனுகும்.

பெருமாள் திருமொழியில் ஈடுபட்ட பெரியார் பலர். அவர்களுள் தலே சிறந்த ஒருவர் அரச கவிஞராகிய குலசேகரரின் திருமொழிகளை ஒதி யோதி உள்ளம் குளிர்ந்து காதலாகிப் பாடிய கவிதை ஒன்று குலசேகரரைப்பற்றிய நம் சிந்தனை களின் மணிமுடியாய்த் திகழத்தக்க மாண்பு மிக்க தாகும. -

இன்னமுத மூட்டுகேன் இங்கேவா பைங்கிளியே! தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமான்-பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் குலசே கரனென்றே கூறு.' இதுவே பத்தரைப் போற்றிய பத்தரின் பாடல்.