பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲨翼朝 காற்றிலே மிதந்தவை

களுளெல்லாம் தொன்மை சான்றது இந்தி: விழா. சிலப்பதிகாரக் காலத்தில் அதுவே தமிழினத்தின் தேசியத் திருவிழாவாய்த் திகழ்ந்தது. காவிரிப்பூம் பட்டினத்தில் 28 நாட்கள் கலேயும் சமயமும் கை கோத்துக் களிகடம் புரிய நடைபெற்ற அப்பெரு விழாக் காட்சிகளே எல்லாம் பெருமிதத்தோடு பாடு கின்ருர் இளங்கோ அடிகள். அப்போது பூம்புகா ரில் பிறவா யாக்கைப் பெரியோன’கிய சிவன் கோவிலும், வால்வளை மேனி வலியோன'கிய பல ராமன் கோயிலும், நீலமேனி நெடியோன'கிய திரு மால் கோயிலும் மாலை வெண்குடை மன்னவனகிய இந்திரன் கோயிலும் மாண் புற் று விளங்கின. விண்ணவர்கோன் விழாவின்போது வேறு வேறு கடவுளர்க்கும் சாறு சிறந்தது ஒரு பால் என்று பல்வகைத் தெய்வங்கட்கும் நல்விழாக்கள் மல்கி கின்ற செய்தியைக் குறிப்பிடும் இளங்கோவடிகள் வாக்கில் அவர் இதயத்தின் எக்களிப்பும் புலனு கின்றதன்ருே ? - -

ஒரு சமுதாயத்தின் சிறப்பெல்லாம் அச்சமுதா யத்தை உருவாக்கும் மக்களையே பொறுத்தது. அவ் வகையில் பழந்தமிழ் நாட்டுக் கோவேந்தர் முதலாகக் குறவர் குடிமக்கள் ஈருக எ ல் லோரும் சமரச நெறியில் வாழ்வைச் செலுத்துவதிலேயே வேட்கை கொண்டிருந்தனர். சிலப்பதிகாரக் காவியத் துள் வரும் ஆய்ச்சியர் குர வையும், வேட்டுவ வரியும், குன்றக்குரவையும் முத்தமிழ்ச் சிறப்பும் ஒருங்கே பொருந்தியவை. ஆய்ச்சியர் குரவையில் வைணவர் நெஞ்சையெல்லாம் உருக்கும் கண்ணன்-மணிவண்