பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 காற்றிலே மிதந்தவை

வைணவ பத்தன் ஒருவன் சந்திக்கின்றன். மதுரை நகருக்கு வழி அறிய விரும்பிய கவுந்தி அடிகட்கு அவன் கூறிய கருத்துக்கள் சில ஏற்புடையனவாய் இல்லை. கருத்து வேறுபாடு கொண்ட அங்கிலேயிலும் சமணத் துறவியாராகிய கவுந்தியடிகள் சிறிதும் சமயக்காழ்ப்பு இன்றிக் கூறிய வாசகம் அவரது பரந்த பொதுமை உள்ளத்தைக் காட்டுகின்றது.

நலம்புரி கொள்கை நான்மறை யாள !

·寧 来源 来 வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க் கியாவது முண்டோ எய்தா அரும்பொருள் ! காமுறு தெய்வங் கண்டடி பணிய நீயோ, யாங்களும் நீள்நெறிப் படர்குதும்!”

(காடுகாண்காதை) இதுவே அருள் நெஞ்சு படைத்த அவ்வன்னேயார் திருவாக்கு.

செந்தமிழ் நாட்டு வேந்தனுகிய சேரன் செங் குட்டுவனே, சிவனருளாலேயே தோன் றிய வன் எ ன் று போற்றப்படுபவன். அவன் காவா நாவின் கனகவிச்யர் ஆணவத்தை அழித்து அவர் தலையில் கற்புத் தெய்வமாகிய கண்ணகிக்குச் சிலே யேற்றிவரத் திட்டமிட்டு, போர்க்கோலம் பூண்டான். அப்போது ஆடகமாடத்தில் அறிதுயில் கொண்ட திருமாலின் வழிபாட்டுப் பொருளைச் சிலர் கொண்டு வந்தனர். சிவபெருமானுக்கன்றி வேறெவர்க்கும் சிரம் தாழ்த்தாத சிந்தை படைத்த் செங்குட்டுவன், அப்பொருளே விருப்போடு வாங்கித் தன் அழகிய