பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமை கண்ட தமிழ் i 17

திருக்கரத்தில் உவகையோடு அணிந்துகொண்டா ம்ை. இப்பொருவரு காட்சியைச் சிலப்பதிகார ஆசிரியர் சொற்சித்திரமாக்கிக் காட்டுகின்றர்.

தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கி அனிமனிப் புயத்துத் தாங்கினன் ...............

(கால்கோட்காதை) என்று அச்சேரன் தம்பியாராகிய சிலப்பதிகார ஆசிரியர் நயைெடு பயனும் நல்கும் வகையில் குறிப் பிடும் திறம் அழகுடையதன்ருே ?

வள்ளுவர்போல் இளங்கோ அடிகள் சைவரா யினும், சமணராயினும், தம் நெறி இதுவென அறி ஞரும் உய்த்து உணர்தற்கு அளிதாகும் வகையில் தம் காவியக் கோ விலே ப் படைத்துள்ளார். வைணவ சமயத்தையும் பெளத்த மதத்தையும் பிற சமயங்களையும் பற்றிப் பாத்திரங்கள் வாயிலாகப் பேசும் போதுமட்டுமன்றிக் கவிகூற்ருகக் கூறு மிடங்களிலும் மிகவும் பத்தியோடு அவர் குறிப்பிடும் பான்மை வியந்து போற்றற்குரியது.

அரசியல் துறையிலும் இலக்கியத் துறையிலும் ஆன்மிகத் துறையிலும் தமிழ் மக்கள் ஒற்றுமை யையே உயிர்நாடியாகக்கொண்டு உய்ய வேண்டும் என்பது இளங்கோ அடிகள் கண்ட பெருங்கனவு. பண்சுமந்த பல்வகைப் பாடல்களும் தமிழன் னேயின் திருவடியில் உதிர்ந்த மலர்களாய்க் கிடக்கும் கிலே மாறி, அவை காவிய மாலேயாய்த் தொடுக்கப்படல்