பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 காற்றிலே மிதந்தவை

வேண்டும் என்று ஆசை கொண்டார் இளங்கோ. அதற்குத் தாமே வித்திட்டார்; வெற்றியும் கண் டார். அரசியல் துறையில் முடியாட்சியால் மூன் முகப் பிளவுபட்டுக் கிடந்த தமிழகத்தைக் கண்ணகி யின் காற்சிலம்பால் ஒன்ருக்கி, அவ்வொற்றுமை என்றும் வாழ ஆசி கூறினர். அவ்வாசியின் வாசியை இன்று தமிழ் நாடு உணர்ந்து போற்றி இன்பப் பொங்கல் வைக்க முந்துகின்றது.

ஆன்மிகத் துறையிலோ தமிழகம் மட்டுமன்றி, வையகமே ஒன்றுபட வேண்டுமென்று விரும்பிய இளங்கோ அடிகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பழந்தமிழ் நெறிவழி, பாருலகம் அமையும் நாள் எங்காளோ என்று ஏங்கினர். அங்காள் கோன்ற வழி ஒன்றே என்பதைத் தமிழ்த்தாயின் திருவடிகளில் தலைதாழ்த்தி, குணவாயிற்கோட்டத் துத் தவம் கிடந்த அ ப் பெ ரு ங் த கை ஊன்றி உணர்ந்து தெளிந்தார். சடங்குகளே சமயம் என்ற பொய்ம்மை நிலை மாறி ஒழுக்க வாழ்வே சமயம்’ என்ற உயர்கிலே வந்தால், மடமைகள் மறையும்; மெய்யறிவு பிறக்கும். இவ்வுண்மைக்கு ஒருவிளக்கம் அளிப்பது போன்றே அவர் கண்ணகிக் கடவுளே நமக்குக் காட்டுகின்ருர். வீரஞ்சான்ற ஒழுக்கத்தால் இமயத்தினும் மேலாக உயர்ந்த உத்தமி கண்ணகி. அவளிடமிருந்த ஒரு பேராற்றல் ஒழுக்கங்தான். அதன்பயனே முத்தமிழ் வேந்தர் முதலாகக் குறவர் --வேடர் ஈருக, கனக விசயர் முதலாக இலங்கைக் கயவாகு ஈருக, அத்தனே பேரும் அன்னேயே, நீயே எங்கள் தெய்வம் என்று சொற்கோயிலிலும் கற்