பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமை கண்ட தமிழ் 119.

கோயிலிலும் மனக்கோயிலிலும் பத்தினிக் கடவுளே வைத்து வழிபட்டனர்.

சமயப் பொதுமை உணர்வு அறிவுசான்ற பெரு மக்களிடம் ஏற்படுவதே அரிது. ஆனால், இளங்கோ அடிகட்கு அப்பொதுமை உணர்வில் இருந்த ஆர்வ மும் வித்தகம் பேசி வாணுளே வீணுக்கும் வழியறி யாத-கள்ளம் கபடம் அற்ற-மக்கள்மீது கொண்ட பற்றும் சேர்ந்து சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களைக்கொண்டே கண்ணகிக் தெய்வத் தைக் காசினி முழுவதற்கும் உரிய பொதுமைத் தெய்வமாக அறிமுகம் செய்து வைக்கத் தாண்டு கின்றது.

"எம்மதமும் சம்மதம் எனக்கொண்ட இளங்கோ அடிகள் பொதுமை நெறியிலே கொண் டி ரு க் க தனியா வேட்கைக்கு அவர் பாடிய சிலப்பதிகாரக் கா வியத் தி ன் முதலும் முடிவுமே சான்றுகள். பகலவனேயும் பால் மதியத்தையும் மாமழையையுமே முன்னர் வாழ்த்திப் பின்னர்ச் சோழநாட்டின் கலே நகரை வாழ்த்திப் பின் காவியத்தைத் தொடங்கு கின்ருர் இளங்கோ அடிகள். ஞாயிறு, திங்கள், மாமழையாவும் இவ்வுலகின் பொதுமைச் செல்வங்க ளன்ருே ? அவ்வாறே காவியத் தை முடிக்கும் பொழுதும் தமிழகத்தை மட்டும் பார்த்துப் பேசாது காரணி முழுவதையுமே பார்த்துப் பேசுகின்ருர்; ஒரு சமயநெறி கின்று உரையாது உலக சமயங்க ளெல்லாம் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளத் தகுந்த பண்பாட்டு நெறிகளையே பறை சாற்றுகின்ருர்.