பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}26

காற்றிலே மிதந்தவை

தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்! பரிவும் இடுக்கனும் பாங்குற நீங்குமின்; தெய்வந் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்; பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்; ஊனுண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; தானஞ் செய்ம்மின்; தவம்பல் தாங்குமின்; செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட் பிகழ்மின்; பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்; அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்; பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்; பிறர்மனே அஞ்சுமின்; பிழையுயிர் ஒம்புமின்; அறமன காமின்; அல்லவை கடிமின்; கள்ளும் களவுங் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகிளில் ஒழிமின்; இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா; உளநாள் வரையாது; ஒல்லுவ தொழியாது; செல்லுந் தேளத்துக் குறுதுணை தேடுமின் மல்லன்மா ஞாலத்து வாழ்வீர்!

இதுவே இளங்கோ அடிகளின் இதயகீதம்;

பொதுமை அறத்தின் புலமை ஒளி; சமயங்தோறும் கின்ற தையலாம் தமிழ்த்தாய் ம ன் ப ைத க் கு வழங்கும் தனிப்பெருஞ்செய்தி. வாழ்க பொதுமை கண்ட தமிழ்! வெல்க தமிழ் கண்ட பொதுமை !