பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்து :

(தி. மூ. நாராயணசாமிப் பிள்ளை எம்.ஏ., பி.எல். அவர்கள்)

வயதில் இளமையினர்; ஆனால், அறிவினில் பெருமையுடையவர் நமது சஞ்சீவி அவர்கள். முத் தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் சமண முனிவராகிய இளங்கோவடிகளேச் சமரச நெறி வித்தகராக அவர்காட்டியது மிகநன்ருய் இருந்தது. அவருடைய பேச்சில் சிலப்பதிகாரச் செம்பொரு ளாக இறுதியில் காட்டிய பொது திேகள் அனேவர் உள்ளத்தினேயும் கவர்ந்திருக்கிறது.

" தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்

மல்லல் மாஞாலத்து வாழ்வீர்! என்று உலகத்தாரை விளித்து,

தெய்வந் தெளிமின் ; தெளிந்தோர்ப் பேணுமின் ; பொய்யுரை அஞ்சுமின், புறஞ்சொல் போற்றுமின் ; கள்ளும் களவும் கசமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமீன்; செல்லும் தேனத்துக்கு உறுதுணை தேடுமின்’ என்று, கூறியது மிகக் கம்பீரமாயும், உணர்ச்சி மிக்கதாயும் பசுமாத்தில் ஆணி அறைந்தாற்போல உயர் ங் த நீ தி யை மனத்தில் பதிய வைத்தது. சஞ்சீவி அவர்களுக்கு நன்றி.