பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் உயிர் 5

பேய் அரசு புரிந்தான் பாவி துரியோதனன் ! அவன் பாஞ்சாலியை-மாதர் குலவிளக்கை-சபை நடுவே இழுத்து வரச்செய்தான். ஐயோ! அம் மாகாசி ஆடை குலேவுற்று அம்பு பட்ட மான் போலத் துடிதுடித்து கிற்கிருள். மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் கூந்தலைப் பிடித்து இழுக்கி முன். அந்தப் பீடை'யைப் பார்த்தான் வீமன்; இடி முழக்கம் செய்கிருன்; சூதாடிச் சூதாடிக் தோற்ற தருமனேச் சாடுகிமு ன்.

நாட்டையெல் லாந்தொலைத்தாய், -அண்ணே!

நாங்கள் பொறுத்திருந்தோம்! மீட்டு மெ.மையடிமை-செய்தாய்,

மேலும் பொறுத்திருந்தோம்! 'துருப தன்மகளைத்-திட்டத் துய்ம னுடன்பிறப்பை, இருப கடையென்ருய்,-ஐயோ!

இவர்க்க டிமையென்ருய்! 'இதுபொறுப்பதில்லை,-தம்பி!

எரித முல்கொண்டுவா! கதிரை வைத்திழந்தான்-அண்ணன் கையை எரித்திடுவோம்! " பேசியவன் யார்? வீமன். ஆனல், பாடியவர் யார்? -பாரதியார்! ஆனால், பாட்டைக் கூர்ந்து கேட்கும் போது நமக்கு அந்த கினேவு வருகிறதா? அது மட்டுமா!

"கதிரை வைத்திழந்தான்-அண்ணன் கையை எரித்திடுவோம்!'

2. பாரதியார் பாடல்கள் (அரசாங்க வெளியீடு) பக். 546