பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் உயிர் 7

பெரும்பெயர்ப் புகாரென் பதியே ; அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னு! தின்னகர்ப் புகுந்தீங்கு என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பதென் பெயரே. ' என்காற் சிலம்பு-நின்பாற் கொலைக்களப்பட்ட க ண் ண கி யி ன் பேச்சைக் கேட்டீர்களா? உணர்ச்சியின் கொடுமுடியைக் கண்டீர்களா ? இதோடு நின் ருளா வீ ர க் க ண் ண கி! சிலம்பை உடைத்தாள்; மணி தெறித்தது. யானே அரசன் ! யானே கள்வன் 1’ என்று கசிந்து வீழ்ந்து மாண் டான் வேந்தன். ஆறியதா அவள் சினம்? அந்த நெஞ்சக் குமுறலைக் கேளுங்கள்:

  • மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்

பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே ரைசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண்குறுவாய் நீ.'என்னு விட்டகலா, நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் வானக் கடவுளரும் மாதவருங் கேட்டிமின்: யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் 1’ ! இந்தக் குரலே மதுரை மாநகர் கேட்டது இன் றன்று-நேற்றன்று-ஈராயிரம்ஆண்டுகட்கு முன்!

3. சிலப்பதிகாரம்-வழக்குரை காதை, 501-83. 4. 登到 -வஞ்சின மாலை, 35-42.