பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் உயிர் 穆

ஆங்கில இலக்கிய அறிஞர்களாகிய ஹட்ஸன்வின்செஸ்தர்-ரிச்சர்ட்ஸ் போன்ற பேரறிஞர்தம் நூல்களோடு நீங்கள் உறவு கொண்டால் கவிதை உணர்ச்சியைப்பற்றிய எத்தனே யோ உண்மை களைத் தெரிந்துகொள்வீர்கள். ஒரு சிறந்த கவிதை அல்லது காவியத்தில் ஊடுருவிப் பாய்ந்திருக்கும் உணர்ச்சிக்கு ஐந்து சிறந்த பண்புகள் தேவை. கவிதையில் வரும் உணர்ச்சி பொருத்தம் உடைய தாய்-சத்தி வாய்ந்ததாய்-கிலேத்து நிற்பதாய்பல்வகைச் சுவை பொருந்தியதாய்-உயர்ந்த பண் புடையதாய் விளங்க வேண்டும்.

இத்தகைய சிறந்த உணர்ச்சி இல்லாத ஒரு கவிதையில் நல்ல ஒசை-நயமான சொல்-சுவை யான கற்ப னே-உயர்வான தத்துவம்-எல்லாம் இருக்கின்றன; ஆல்ை, உணர்ச்சிதான் இல்லே என்ருல், என்ன பயன்? சுதந்தரமற்ற மக்களைப் பற்றிப் பாரதியார் சொல்லியது போல அணிகள் வேய் பி ண த் தோடு ஒப்பிட வேண்டுவதுதான். வாழப் பிறந்த கவிதையில் இரு வகை உணர்ச்சி கள் பின்னிக்கிடக்க வேண்டும். ஒன்று, கவிஞ னது உணர்ச்சி ; இ ன்.ெ ைன் று, காலத்தின் உணர்ச்சி. கவியரசர் பாரதியாரின் பாடல்களைப் பாமரர் முதல் பண்டிதர் வரை எல்லா மக்களும் போற்றுவது ஏன்? பாரதியார் மக்களின் உணர்ச் சியைப் பாடினர் மக்களின் உணர்ச்சிக்காகப் ப்ாடினர். அவர் பாடல்களில் எளிமை தவழ்கிறது. ஆனல், உணர்ச்சி வீறிடுகிறது. அந்த உணர்ச்சி யும் இலட்சியப் பாதைக்கு வழி கோலுகிறது.