பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியங்களில் பொறை 13

வேறு எவருக்கும் எள்ளளவு தீங்கையும் சிந்தை யாலும் செய்யாதவராய், பொறையின் பயன் கண்ட வராய், தவத்தோராய், வள்ளுவர் காட்டிய வழியில் -காந்தி அடிகள் வாழ்ந்த நெறியில்-வாழலாம்.

பொறை'யின் சிறப்பைத் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் விரிவாகப் பேசுகின்றன. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சான்ருேர் போற்றும் பழந்தமிழ் நூல்கள் ஆகும். சங்க இலக்கியங்கள் என்று போற் றப்படும் பெருமை அந்நூல்களின் தனி உரிமை யாகும். ஏனைய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அச்சங்க இலக்கிய கிழலிலே தோன்றியவை என்று அறிஞர்கள் கடறுவார்கள்.

சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டும எட் டுத்தொகையும் பழந்தமிழ் மக்களின் ஒப்பு உயர் வற்ற நாகரிகத்தைப் படம் பிடித்துக் காட்டும் சொல்லோவியங்களின் கூடமாகும். அழகொழுகும் அச்சொல் ஒவியங்கள் கிறைந்து விளங்கும் கலே யோவியக் கூட த் துள் துழைந்து பார்த்தால், பொறை என்ற சிறந்த பண்பு தமிழ் மக்கள் வாழ்க்கையில் எவ்வாறு ஒளி பெற்றுத் திகழ்ந்தது என்பதை உணர்ந்து மகிழலாம். மாநிலத்தின் காவலனும், மனேயின் தலைவியும், சினமடங்காப் போர் வீரனும், செந்தமிழ் வளர்க்கும் புலவனும், கலைச் செல்வர்களும், சமய ஞானிகளும் எவ்வாறு பொறை என்ற உயர்ந்த பண்பைத் தங்கள் வாழ்க் கையில் போற்றிவந்தார்கள் என்பதைப் பத்துப் பாட்டும் எட்டுக்தொகையும்.கமக்கு விளக்குகின்றன.