பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篡 காற்றிலே மிதந்தவை

பொறை என்ற உயர்ந்த பண்பு தனி மனித லுக்கும் தேவை; ஒரு சமூக த் தி ற்கு ம் தேவை. "பொறை என்ற சிறந்த பண்பு, சொல்-செயல் -சிந்தனே என்ற மூன்றிலும் சிறந்து விளங்க வேண்டும். ஒன்றில் பொறை இருந்து மற்ருென் றில் இல்லையானல், அதனுல் பெரிய பயன் ஒன்றும் இல்லை. சொல்லிலும் செயலிலும் சிந்தனையிலும் பொறை'யைப் போற்றிய சங்ககாலத் தமிழ் மக்கள் தங்கள் வீட்டு வாழ்க்கையிலும் நாட்டு வாழ்க்கை யிலும் உலக வாழ்க்கையிலும் பொறை'யை மேற் கொள்ள வேண்டும் என்ற தெளிந்த ஞானத்தைப் பெற்றிருந்தார்கள். இந்த உண்மையை அழகுற விளக்கும் எண்ணற்ற சான்றுகள் சங்க இலக்கியங் களில் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை மட்டும் காண்போம்:

வாழ்க்கையில் எத்தனையோ வகையில் துன்பம் வரும். உடலுக்கும் உள்ளத்திற்கும் உயிருக்கும் அத்துன்பம் வரும். ஆல்ை, ஒரு வகையில், உட லுக்கும் உயிருக்கும் வரும் துன்பத்தைக்காட்டிலும் உள்ளத்திற்கு வரும் துன்பமே மிகப் பெரியது; மிகக் கொடியது.

தலைவியை அன்பு செய்து மணம் புரி ன் து கொண்ட தலைவன் வாழ்க்கை க்கு வேண்டிய பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றுவிட் டான். அவன் விரைவில் திரும்பி வர முடியாமல் போய்விட்டது. கலேவியின் துன்பம் மிகக்கொடிய தாயிற்று. அவள் கண்கள் அழுத வண்ணமாய் இருக்தன. இங்கிலேமையைக் கண்ட ஊரில் உள்ள