பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியங்களில் பொறை 15

பெண்டிர், பிரிந்த தலைவனேயும் அவனே கினேந்து வருந்திய வண்ணமாய் இருக்கும் த லே வியையும் எள்ளினர்-பழித்தனர். தோழி வாயிலாக ஊரார் எள்ளுவதை அறிந்த தலைவியின் நெஞ்சம் புண் ணுயிற்று. என்ருலும், அவள் பொறையே வடி வாய் இருந்தாள் சுடச்சுடரும் பொன்போலப் பிரி வுத் தீயும், ஊரார் துாற்றும் பழிநெருப்பும் தன்னைச் சுட்ட போதும் பொறையே வடிவெடுத்தவளாய் மனப் பண்பாடு குன்ருது விளங்கிள்ை. துன்பம் மிக்க அங்கிலேயிலும் அவள் என்ன கூறினுள்?

“...... என் ஆய்நலம் தொலையினும் தொல்ைக!

என்றும் நோயில ராகதம் காதலர்! " 'என் சிறந்த அழகு கெடுவதானுலும் கெடட்டும். நம் காதலர் என்றும் கோயிலராகத்-துன்பம் இல் லாதவராக - இருக்கவேண்டும், என்று வேண்டி ள்ை.

அகநானூற்றில் மாமூலனுர் பாடியுள்ள இத்தலைவி யைப்போலத் தலைவன் பிரிவாலும், தலைவன் செய் யும் தவறுகளாலும், வ ன் ென ஞ் சம் கொண்டு ஊரார் ஆாற்றும் பழியாலும் மனம் நொந்து துன் புற்ற போதெல்லாம் தலைவி பொறையே வடிவாய் இருந்த காட்சியைச் சித்திரிக்கும் சொல்லோவியங் கள் பலவற்றைச் சங்க இலக்கியங்களில் காணலாம். பொறுத்திருப்பதையே-தலைவன் பிரிந்த காலத் தில் ஆற்றி இருப்பதையே-கற்பின் நெறியாகமுல்லைத் திணேயாகத் தமிழ் மக்கள் போற்றினர்கள்

1. ىsars115- سقيمه