பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியங்களில் பொறை 17

மன்னர்கள் கினைத்த போது கோவூர் கிழார் போன்ற புலவர்கள் கூறிய அறிவுரை கேட்டுச் சோழன் நெடுங்கிள்ளி, கிள்ளி வளவன் போன்ற மன்னர்கள் பொறையை மேற்கொண்டார்கள் என்ற செய்தியைப் புறநானூறு நமக்கு அறிவிக்கிறது.

சங்க இலக்கியச் சான்ருேர்கள் பொறையுடை மன்னரைக் கண்டால் போற்றத் தவறியதில்லே. பாண்டவராகிய ஐவருக்கும் துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் இடையே பாரதப் போர் மூண்ட போது நடுவு கிலேமை உடையோய்ை கின்று இரு படைக்கும் பெருஞ்சோறு அளித்தான் உதியன் சேரலாதன் என்ற மன்னன். அம்மன்னன் அகழ் வாரைத் தாங்கும் கிலம் போல’ப் பூமியினும் பொறை மிக்கானுய் விளங்கின்ை.

போற்ருர்ப் பொறுத்தல் அவன் பண்பு, என்று போற்றுகிருர் முடிநாகராயர் என்ற புற நானூற்றுப் புலவர்.'

பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக் கியத் தி ல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனேக் குமட்டுர்க் கண் ண ன ரும், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலேக் காப்பியாற்றுக் காப்பியனரும் போற்றிப் புகழும்போது அம்மன்னர்கள்பால் அமைந்துள்ள, எண்ணற்ற ற் பண் புக ளு ஸ் ஞ ம் பொறையே பெருஞ்சிறப்புடையது என்றும், அப்பண்புக்கு கிகாான பொருள் உலகில் யாண்டும் இல்லை

1. புறம் 2

2