பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியங்களில் பொறை 2}

அறியாமை' என்றறியும் அருள் நெஞ்சம் படைத்த வர்க்கே அஃது இயலும்.

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர். ' என்று நற்றிணேயும்,

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். ' என்று வள்ளுவரும் போற்றும் நாகரிகம் உடைய வருக்கே அஃது இயலும். ஆல்ை, அத்தகைய அரு ளும் நாகரிகமும் யாருக்கு அமையும்? ‘புதுவ தன்றில் வலகத் தியற்கை : என்று இவ்வுலகியலே நன்கு உணர்ந்து-மெய்யறி வும் மெய்யுணர்வும் பெற்றுப் பண்பாடே வடிவாய் விளங்கும் சான்ருேர்கட்கே அப்பண்பு எளிதில் அமையும்.

இந்த உண்மையினேக் கணியன் பூங்குன்றனர் பாட்டு நமக்கு விளக்குகிறது. ‘நன்மை தீமை இரண் டும் ஒருவன் தானே படைத்துக்கொள்கிருனே யன்றி, அவை பிறரால் வருவன அல்ல. எனவே, அவனுக்கு யாரிடத்தும் விருப்போ வெறுப்போ இல்லை. சாவைக் குறித்த அச்சமும் அவனுக்கு இல்லை. நீரிலே மிதக்கும் ஒரு பொருள் நீர் போகும்

சிலப்பதிகாரம், நாடுகாண் காதை, 237-8 நற்றினே-355

திருக்குறள், 580

புறம். 76