பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 காற்றிலே மிதந்தவை

வழியே போவது போல, உயிரும் தன் செயல் என்ற ஒன்று இன்றியே தொழிற்படுகிறது. இத ஒல், வாழ்க்கை வேண்டும் என்று விரும்புவதற்கு என்ன இருக்கிறது? அல்லது வேண்டா என்று ஒதுக்குவதற்குத்தான் என்ன இருக்கிறது? நன்மை மிக்கவர்களேப் பார்த்துப் புகழ்வதற்குத்தான் இட முண்டா? அல்லது சிறியோரைக் கண்டு இகழ்வது தான் கூடுமா?’ என்ற இத்தகைய உயர்ந்த அறிவை -மெய்யுணர்விற்குரிய தெளிந்த காட்சி யை ப் பெற்ற திறவோர்க்கே, பொறையுடைமையின் இறுதிப் பயனுகிய-மிகச்சிறந்த பயனுகிய

  • யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ! என்ற சமரச உணர்வு நெஞ்சில் பொங்கி எழும்.

இப்பேருண்மையை நாம் எல்லோரும் உணர்ந்து, உலக மெல்லாம் ஒரு குடும்பம்' ஆவதற்குப் புற நானூற்றுப் பாடலும், பிற சங்க இலக்கியங்களும் நமக்கு வழி காட்டுகின்றன.

1. புறம், 192