பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பாரதியாரும் சுதந்தரமும்

விரிந்து பரந்து கிடக்கும் தமிழ் இலக்கிய வர லாற்றில் தேசியக் கவிஞர் பாரதியார் பெற்றுள்ள இடம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

வள்ளுவர் வான்மறை, கம்பர் கவியமுதம், இளங்கோவின் எண்ணக் களஞ்சியமாம் சித்திரச் சிலப்பதிகாரம், இன்ன பிற செந்தமிழின் சுவை காட்டும் நூல்கள் எல்லாம் செல்லரித்த ஏடுகளாய் மடங்களிலும் க வி ராயர் வீட்டுப் பரண்களிலும் சிறைப்பட்டிருந்த நாளில், இன்பத்தமிழின் ஏற்ற மெல்லாம் அடிமைத் தாயகத்தில்-ஏகாதிபத்தியக் கொடுமையில் - அழிந்தொழிந்து மக்கள் கினேவி னின்றும் மட்கி மடிந்தேவிடுமோ என்ற கோரக் கொடுகிலே தோன்றிய நாளில், தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் விடுதலே தேடிப் போர்க்களம் புகுந்து சுதந்தரப் போரில் தியாகத்தீயில் - தமது உடல் பொருள் ஆவியை எல்லாம் அர்ப்பணித்து, தமிழ் இனத்தின் - பரதகண்டத்தின் - விடுதலைக்காகக் களப்பலியான முதற்கவிஞர் - தமிழ்க் கவிஞர் - பாரதியாரேயாவர்.

ஆம்! வள்ளுவருக்கில்லாத வாய்ப்பு, கம்பருக் கில்லாத பெருமை, இளங்கோவுக்கு இல்லாத புகழ், ஏகாதிபத்தியக் கொடுமையை எதிர்த்து ஆவேசப் போர் புரிந்து சொல்லொணுத் துயர் உழந்த அமர கவிஞர் பாரதியாருக்கு உண்டு!