பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரும் சுதந்தரமும் 3i

கொச்சை இன்பங்களே விரும்பி உன்னதக் குறிக்கோளே மறக்கும் உன்மத்தர்களைப் பாரதியார் சாடுவதைப் பாருங்கள்:

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்தரத்தின்

மாண்பினை யிழப்பாரோ? கண்ணிரண் டும்விற்றுச் சித்திரம் வாங்கினு ற்

கைகொட்டிச் சிரியாரோ!' என்று கேட்கிரு.ர்.

இப்படி இன்னும் கொள்ளே கொள்ளைக் கவிதைகளில் சுதந்தரத்தின் பெருமைகளைப் பாடு கிருர்; அவற்றை உணராத நடிப்புச் சுதேசிகளைச் சாடுகிரு.ர்.

பாரதியாரின் சுதந்தா உணர்ச்சி அவரைப் பெற்றெடுத்த பரம்பரை தந்த பரிசு; அவரைக் கண்டெடுத்த காலம் அவருக்கு இட்ட கட்டளை , அவரை ஈன்றெடுத்த இன்பத் தாயகத்தில் நிமிர்ந்து நிற்கும் இமயம்-விரிந்து கிடக்கும் பொழில்கள்குளிர்ந்தோடும் கங்கை-குவிந்திலங்கும் குமரி முனே -இவை ஊட்டிவிட்ட தெள்ளமுதம். அதலைன்ருே, அந்த அமர கவிஞர்,

  • மன்று மிமய மலையெங்கள் மலேயே ;

மாநில மீதது போற்பிறி திலேயே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே;

இங்கிதன் மாண்பிற் கெதிரேது வேறே??? என்று பாடிய அதே மூச்சில்,

1. பாரதி நூல்கள் (அ. வெளியீடு)-பக். 66 2. 錢3 -பக். 8