பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரும் சுதந்தரமும் 33

பெற்ற அற்புத வெற்றியெனப் பாடிச் சமதர்ம முரசு கொட்டுகிருர்-தமிழினத்தின் தலையாய சர்வ தேசியக் கவிஞர் பாரதியார்.

பாரதியாருக்குச் சுதந்தாம் என்பது வெறி யூட்டும் உணர்ச்சியாய் மட்டுமில்லை; நெறி காட்டும் வாழ்வாயும் விளங்கியது. சுதந்தாத்தின் முழுப் பொலிவினையும் நன்குணர்ந்திருந்தார் பாரதியார். எல்லா விடுதலைகட்கும் வித்து அரசியல் விடுதலேயே என்பதை அவர் கன்கு அறிவார். ஆனால், வித்தே மரமாக - அடித்தளமே அரண்மனையாக-இளம் பிறையே முழுமதியாக மாறிவிடாதல்லவா? அா சியல் சுதந்தரம்-பொருளாதாரச் சுதந்தரத்திற்கு -சமுதாயச் சுதந்தாத்திற்கு-கலாசாரச் சுதந்தரத் திற்கு-ஏன்?-ஆன்மிகச் சுதந்தாத்திற்கு வழிகாட்ட வேண்டும் எனக் காந்தியார் போலவே நம்பினர் கவியரசர் பார தி யார். அதனுலேதான் அயல் ஆட்சியை எதிர்த்த ஆவேசத்தில் எள்ளளவும் குன் ருத ஆவேசத்தோடு

  • உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம்;-வீனில்

உண்டுகினித் திருப்போரை நிந்தனசெய்வோம்; விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்-வெறும்

வினருக் குழைத்துடலம் ஒயமாட்டோம்.' இனியொ ருவிதி செய்வோம்;-அதை எந்த நாளும் காப்போம் ; தனியொ ருவனுக் குணவி லையெனில் - ஜகத்தி னயழித் திடுவோம்!'

1. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக்.53 2. 3; j ž டிக். 29

3