பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காற்றிலே மிதந்தவை

எனப் பொருளாதாரப் புரட்சி முழக்கமிட்டார், பாட்டாளியாகிய பாரதியார். அதோடு அவர் கிற்க வில்லை. விடுதலே என்பது சமுதாயத்தின் மேல் களத்தில் இருக்கும் வர்க்கத்தார்க்கு மட்டும் அன்று; சமுதாயத்தின் அடித்தளத்தில் அமுக்குண்டு நசுக் குண்டு சிக்கி இருக்கும் அத்தனே பேரும்-ஆண் குலத்தோடு பெண் குலமும்-சேர்ந்து காணும் சுகங் தரமே உண்மையான விடுதலே என உல்கறிய முரசறைந்தார்.

'பறைய குக்கு மிங்குத் தீயர் புலைய ருக்கும் விடுதலை! பரவ ரோடு குதவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை!

旁 姿 染 ' ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனு மில்லை ; ஜாதியில்

இழிவு கொண்ட மனித ரென்ப திந்தி யாவில் இல்லையே!

语 袭 豪

  • Erதர் தம்மை யிழிவு செய்யு

மடமை யைக்கொளுத்துவோம்! " என்று சமுதாயப் புரட்சிப் பண்ணிசைத்தார் பாரதியார். அவ்வாறே,

வேறு வேறு பாஷைகள்-கற்பாய்தீ

வீட்டு வார்த்தை கற்கிலாய் போபோபோ !” என்று கலாசாரச் சுதந்தரத்திற்கும் கால்கோள் விழாச் செய்தார் கவியரசர் பாரதியார்.

பாரதியாரின் இந்தச் சுதந்தா ஆவேசம் அர சியல் விடுதலையை-பொருளாதார விடுதலையை

1. பாரதி நூல்கள் (அ. வெ.) பக். 51-2 3. 32. $3 பக். 27