பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரும் சுதந்திரமும் 37

மேலும், த மிழா பயப்படாதே! ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களே எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய், எனத் த மி ழ ரு க் கு க் கட்டளை இடுகின்ருர் அம்மகா கவிஞர். எதிர்கால இந்தியா வில் உண்மையான தேசியக் கல்வி உரம் பெற மொ ழி வழி ஆட்சியே மார்க்கமென எவ்வளவு தெளிவாகக் குறிப்பிடுகிருர் பாருங்கள்!

- 'பள்ளிக்கூடம் ஏற்படுத்தப் போகிற கிராமம் எந்த மாகாணத்திலிருக்கிறதோ, அந்த மாகாணத் தின் சரித்திரம் விசேஷமாய்ப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இங்கு கான் மாகாணம் என வகுத் திருப்பது ............ சென்னை மாகாணம் முதலிய தற்காலப் பகுதிகளைக் குறிப்பதன்று. பாஷைப் பிரிவுகளுக்கிசைந்தவாறு வகுக்கப்படும் தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மலையாளநாடு முதலிய இயற்கைப் பகுதிகளைக் குறிப்பது.”

வருங்கால பாரத சமுதாயத்தின் சுதந்தர உணர்ச்சியை அழியாது காக்கவல்ல அரண், தாய் மொழிப்பற்றும் கலாசார சுதந்தரமுமே என்பதில் பாரதியாருக்குள்ள பற்றையும் பத்தியையும் பார்த் தீர்களா ஆம். பாரதியாருக்கு மொழி வழி ஆட்சி 'குறுகிய புத்தியன்று ; உன்னதக் கொள்கையின் உயர்வான திட்டம்.

ஆங்கில அடிமைக் கல்வி ஒழியத் தேசியக் கல்வி ஒன்றே வழி. அக்கல்வியும், தாய்ப்பாலுக்கு நிகரான தாய்மொழியிலேயே தரப்பட வேண்டும்.