பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நற்றிணையில் நாடகப் பண்பு

'உலகமே ஒரு நாடகமேடை ஆடவர் மகளிர் அனேவரும் அதில் கடிக்கும் நடிகர்களே, என்ருர் உலக நாடகப் பெருங்கவிஞர்களுள் ஒருவராகிய ஷேக்ஸ்பியர். ஆம், உலக மே ஒரு பெரிய நாடக மேடைதான். அதிலும், உலக வாழ்க்கையே ஒரு பெரிய நாடகங்தான். நாம் அனேவரும் அதில் பங்கு கொள்ளும் நடிகர்களே. வாழ்க்கை நாடகத்தை வரைந்து, உலகமரம் மேடை அமைத்து, அதில் ஆடிப்பாடும் நடிகர்களாக நம்மைஎல்லாம் நிறுத்தி ஆட்டிப்படைக்கும் அந்த நாடகப் புலவன் யார்? அலகிலா விளையாட்டுடைய ஆண்டவனுகத்தான் இருக்க வேண்டும்.

வையக வாழ்க்கையே ஒரு நாடகம், என்பதைக் கண்டபின் அந்த வாழ்க்கையின் ஆராய்ச்சியாகசொற்சித்திரமாக-விளங்கும் கவிதைகளும் காவியங் களும் நாடகச்சுவையும் பண்பும் நிறைந்து விளங்கு வதில் வியப்பும் உண்டோ? இந்த உண்மையை மனத்தில் சிறு க் தி க் கொண் டு சங்க இலக்கியப் பாடல் க ளே - சிறப்பாக அ. க ப் .ெ பா ரு ள் சுவை அமைந்த தீ ங் த மி ழ் ப் பாடல் க ளே - அனுபவிக்க முற்படுவார் மனக்கண்களில் அப் பாடல்களின் அகத்தே மறைந்து கிடக்கும் நாடகப் பண்புகள் புலனுவது திண்ணம்,