பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணையில் நாடகப் பண்பு 45

அண்ட பகிரண்டங்களை எல்லாம் தன்னுள் அடக்கிக்கொண்டு யாதுமாகி ஓங்கி உயர்ந்து ஆழ்ந்து அகன்று துண்ணியதாய் கிற்கும் பரம் பொருள் காட்சியையே விசுவருப தரிசனம்’ என்பர் மேலோர். ஆரியப் போரில் அருச்சுனன் கண்ட இக்காட்சியை அருந்தமிழ்ப் புலவராகிய பெருங் தேவருைம் காண்கிருர் கண்டு களிப்போடு நமக்கும் காட்டுகிரு.ர்.

梁 染 海

கடலேயும் தாங்கி கிற்கும் தரை; பரந்த பார் கிலம்; இதுவே எல்லாமாய் கிற்கும் பெரும்பொரு ளின் அடிகிலே; செவ்விய திருவடி. கண்ணிற்கு எட்டியும் எட்டாமலும் விளங்கும் இப்பெருகிலமே * முழுமுதற்பொருளின் ம லா டி யெ ன் ரு ல், அப் பெரும்பரம்பொருள் உடுத்துக்கொள்ளும் ஆடை யாய் விளங்குகிறது அலே மோதும் பெருங்கடல், எறிதரங்கம் உடுக்கும் புவனங்கடந்த ஒருவன் அல்லனே இறைவன் அவனேப்போலவே அவ ைைடயும் அளவற்று எங்கும் விரிந்து கிடக்கிறதுபவ்வம் எனப்படும் பரந்த கடல். காட்சிக்கு அடங் காததாய் கருனேயே உருக்கொண்டதாய் வான மழைக்கும் மூலமாய் விளங்கும் கடலினும் சிறந்த ஆடை கடவுளுக்கு உண்டோ? ஒல்லெனும் பேரொ லியால் அக்கடல் அவன் பெருமையை ஓயாமல் முழங்கிய வண்ணம் இருக்கிறது. கடல் வாழ் சங் கின் ஒலியிலும் அவன் புகழே கேட்கிறது. இவ் வாறு கடவில் வாழும் கணக்கற்ற சங்கொலிகள் புகழ் பாட விளங்கும் பரம்பொருளின் திருமேனி.