பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 காற்றிலே மிதந்தவை

அகல் விசும் பேயாகும். லேவானமே அவன் கோலத் திருமேனி. எட்டுத் திசைகளாய்ப் பரந்து விரிந்து செறிந்து கிடக்கின்றன. அவன் கைத்திறங் கள். ஆம். எட்டுத் திசையும் எட்டுக் கரங்களாய், எண்டோள் வீசி கின்ருடும் விசுவரூபக் கூத்துடை கான் கடவுள். திசைகள் கைகளாகும் காட்சி கருத்துக்கும் எட்டாக் காட்சிதான். ஆயினும், விஞ்ஞானத் துறைகள் பலவும் கூறும் கருத்தின் ஒருமைக் காட்சியை-கற்றரையாய், கருங்கடலாய், கருவானமாய் விளங்கும் தன் திருக்காட்சியைஇறைவன் நமக்கெல்லாம் காட்டி உய்விக்க வேண் டாவோ? அதற்கு உறுதுணேயாய் விளங்கும் இரு பெருஞ்சுடர்கள் சூரியனும் சக்திரனும். அவையே அவன் இரு கண்கள். தன் கண்களின் ஒளியால் உலக உயிர்களின் கண்கள் அனேத்திற்கும் ஒளி யூட்டுகிருன் அப்பரம்பொருள். கண்கள்ாய் கிற் கும் சுடரும் திங்களுமே காலத்தைக்காட்டும் உலகப் பெருங்கடிகாரங்கள். எனவே, காலதத்துவமாயும் அதற்கு அப்பாற்பட்டும் விளங்குகிருன் கடவுள். இவ்வாறு இடமும் காலமுமாக இயன்று வரும் பொருள்களோடு எல்லாம் பயின்று கிற்கின்ருன் ஈசன். உலகை எல்லாம்-உயிர்க் கூட்டத்தை எல் லாம்-ஒழுங்குபட இயக்கும் பரம்பொருள் அறி விலாப் பொருளாய் இருக்கல் இயலாது; சிற்றறி வுடைய பொருளாகவும் இருத்தல் இயலாது; பேரறி வுடைய பொருளாதல் வேண்டும். அனேத்து உணர் வையும் ஆட்டுவிக்கும் உணர்வின் கொடுமுடியாய்க் திகழும் அவன், ஐயா என அரற்றி முழங்கும்