பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணையில் நாடகப் பண்பு 47

வேதங்களின் முதல்வனுகவும் இருத்தலில் வியப் பில்லே அன்ருே ?

மேலும், கனி முடி கவித்து நாடாளும் மன்ன னிலும் அண்ட பகிரண்டம் அத்தனையும் ஆளும் ஈசனகிய இறைவன், உலக உயிர்கட்கு எல்லாம் இனியனுய் - பேரின்பத்தையே நல் லாட்சி யாய் வழங்குவோய்ை-அத்திறத்திற்கு ஏற்பத் தட்டின்றி உருளும் தீதிலா ஆஞ்ஞா சக்கரத்தைக் கொண்டோ ய்ைத் திகழ்கிறன்.

இவ் வு ன் ைம க ளே எல்லாம் புலப்படுத்தும் வகையில் மண்ணுய், விண்ணுய், திசையாய், திங் களாய், இயன்றன எல்லாம் பயின்ற பொருளாய், வேதமுதலுமாய் விசுவரூபம் கொண்ட இறைவன் அளிக்கும் திருக்காட்சியைச் சொல்நயமும் பொருள் நயமும் பொருந்தப் பெருங்தேவனர் பாடுகின்ருர்,

மாநிலம் சேவடி ஆக, துநீர் வனே நரல் பவ்வம் உடுக்கை ஆக, விசும்புமெய் ஆக, திசைகை ஆக, பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக, இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே. ஆராய்ச்சித் திறங்கொண்ட அருந்தமிழ்ப் புலவர்க்கு இறைவனது விசுவரூபக் காட்சியை-நாடகத்தைவிளக்கும் அமிழ்தமன்ருே இப்பாடல்!

1. நற்றிண்ை-கடவுள் வாழ்த்து