பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தமிழ் நாட்டின் இசை

தமிழ் நாட்டின் இசை தனிச் சிறப்பு வாய்ந்த தாகும். அதன் வளத்தையும் வரலாற்றையும் தமிழ் இலக்கியக் கண்கொண்டு பார்த்து மகிழ்ந்து இன் புறல் ஒரு தனிப்பேறேயாகும். தேனினும் இனிய நம் தீந்தமிழை முத் தமிழ் என்றே தொன்று தொட்டு வழங்கி வந்தனர் தமிழர். இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும்பிரிவுகளாகத் தமிழ் மொழியைப் பாகுபாடு செய்து போற்றி வளர்த்த அவர்கள், கங்கள் அன்னே மொழியை அவ்வாறு வழங்கிய வழக்காற்றிலிருந்தே இன்பத் தமிழகத் தில் இசைக்கலை சென்ற காலத்தில் பெற்றிருந்த பெருஞ்சிறப்பினே ஒருவாறு ஊகித்து உணரலாம். பழந்தமிழ் நூல்கள் பலவும் தமிழ் மொழி முத்தமி ழாய் விளங்கிய காட்சியினைத் தெளிவுபடுத்துகின் றன. தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் என்று பரிபாடல் கூறுகின்றது. பழமை சான்ற தமிழ் இலக்கண நூல் எனக் கருதப்படும் அகத்தியம், முத்த மி ழு க் கும் இலக்கணம் கூறும் வித்தகநூல் என்னும் கருத்தைப் பண்டைத் தமிழ் உரையாசிரியர்கள் மறைவின்றி எழுதி வைத்துள் ளார்கள். செல்வச் சில ப்ப தி கா ரம் முத்தமிழ் இலக்கணத்திற்கும் இலக்கியமாய் அமைந்த தீஞ் சுவைக் காவியம் என்ற உண்மை அடியார்க்கு நல்லார் உரையால் தெளிவாகிறது.